பிரதமரின் சாகர் மாலா திட்டம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • இந்தியா, உண்மையில் இந்தியப் பெருங்கடலிலின் நடுவில் அமைந்துள்ளது. இந்தியாவின் புவி அமைவிடம் ஒரே நேரத்தில் பாதுகாப்பானதும் பலவீனமானதுமாகும். ஒருவிதத்தில் நாட்டுக்கு மிகப்பெரிய கடற்கரைப் பகுதி கிடைக்கிறது. இன்னொருவிதத்தில் இத்தனை நீளமான கடற்கரையை எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது.

25-1458899830-navy-3-25-1458891680

 

 

 •    நமது மிகப்பெரிய பிரச்சினை நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்ப தல்ல-மாறாக கடலோரப் பகுதிகளைக் காவல் காப்பதேயாகும். இதனைக் கருத்தில்கொண்டே மத்திய அரசால் சாகர் மாலா திட்டம் உருவாக்கப் பட்டது.
 • 2015, மார்ச் 15-ல் மத்திய மேலவையால் சாகர் மாலா திட்டம் அங்கீகரிக்கப் பட்டது. உண்மையில், இத்திட்டம் வாஜ்பாயின் கனவுத் திட்டமாகும். நரேந்திரமோடி அதற்கு உருவம் தந்து நிறைவேற்ற மட்டுமே செய்திருக்கிறார்.
 • இத்திட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2 சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 •   இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு. மேலும் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடாகும்.
 •  உலகின் மிகநீளமான கடற்கரையைக்கொண்ட நாடுகளில் இந்தியா வுக்கு முன்னணி இடம் உண்டு.
 • 7,000 கிலோமீட்டர்  நீளம் கடற்கரையைக் கொண்ட இந்தியா அதன் மொத்த உற்பத்தியில் 90 சதவிகிதத்தை கடல்வழி யாகவே மேற்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் உண்மையில் அவ்விதம் நடக்கவில்லை.
 • தற்சமயம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சாலைவழிகள் 6 சதவிகிதம் பங்களிப்புச் செய்ய, இருப்புப் பாதைகள் 9 சதவிகிதம் பங்களிப்புச் செய்ய, கடல்வழிவணிகம் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே பங்களிப்பு செய்கிறது. இதற்கு என்ன காரணமென யோசித்தால் துறைமுகங்களுக்கு தொடர்புச் சாலைகள் போதுமானதாக இல்லாததும், துறைமுகங்களின் உள்கட்டுமான வசதி போதுமானதாக இல்லாததுமே என அறியலாம்.
 •    இதையெல்லாம் கவனத்தில்கொண்டு, இந்தியாவின் அனைத்து துறைமுகங்களும்போக்குவரத்து இணைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதும், நன்கு நிர்வகிக்கப் படுவதுமே துறைமுகங்களின் வழி வரும் வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என தற்போதைய அரசு திட்டமிட்டது.
 • சாகர்மாலா திட்டத்தின் முக்கிய அம்சங்கள் துறைமுக உள்கட்டுமானத்தைநவீனப்படுத்துதல்.
 •  துறைமுகம் தொடர்பான கொள்கைகளை செழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்தல் அனைத்து துறைமுகங்களும் பிரதான பொருளாதார செயல்பாட்டுடன் ஒன்றுடனொன்று தொடர்பிலிருக்கும்படி போக்குவரத்து உட்கட்டுமானத்தை திறன்மிக்கதாகவும் நீடித்ததாகவும் உருவாக்குதல், மேலும் அந்த துறைமுகங்களின்வழி சிறப்பான வருவாயை ஈட்டுதல்.
 • நெதர்லாந்து, துபாய், கொரியா, ஜப்பான்,    சீனா போன்ற நாடுகளில் சிலவற்றுக்கு நம் போன்ற பெரிய கடலோரப் பகுதி கிடையாது. இருந்தும் அவை தம் நாடுகளில் கடற்கரையோரப் பகுதி களையும் துறைமுகங்களையும் ஏற்றுமதி- இறக்குமதிக்கு வசதியாக நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தி வளமாகத் திகழ்கின்றன.
 • எனவே இந்தியா கடற்கரையோரப் பகுதிகளை பலமானதாக உருவாக்கவும், பெரியளவிலான உட்கட்டுமான வேலைகளை மேற்கொள்ளவும் இதுவே தருணம்.
 •  இதற்காக இத்திட்டத்தின்கீழ் 1200 பெரிய மற்றும் சிறிய தீவுகளை இந்தியாஅடையாளம் கண்டுள்ளது. அவற்றில் 189 லைட் ஹவுஸ்களை ஏற்படுத்தி முறையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் இத்தீவுகளில் சுற்றுலா மற்றும் வணிகத்தையும் ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 •  இந்த தீவுகள் மற்றும் கடலோர சிறுநகரங்களில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடும் திட்டமிடப்பட் ட உட்கட்டுமான வசதிகளோடும் கடற்கரை யோர பொருளாதார மண்டலங்கள்உருவாக்கப்படும். அத்துடன் இப்பகுதி களுக்கு தாராளமான நிதி ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கப்படும். குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் இதற்கொரு உதாரணமாகும்.
 • புதிய துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டு கட்டியெழுப்பப்படு வதோடு, பழைய துறைமுகங்களும் நவீன சாதனங்கள்,தகவல் தொழில்நுட்ப வசதி போன்றவற்றோடு தினசரி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தகுதியுடையதாய் வளர்த்தெடுக்கப்படும்.
 •  இந்தியாவின் பெரிய துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுகம், சிறப்புபொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்காக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
 • இத்தகைய மாதிரி துறைமுகங்கள் பெரும் கப்பல்கள் பலவும் ஒரே நேரத்தில் வந்திறங்கவும், இலகுவான துறைமுக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்வசதியுடையதாய் இருக்கும்.
 • இத்துறைமுகங்கள் ரசாயனங்கள்,மின்சாரம், நிலக்கரி மற்றும் இதர பொருட்களில் முக்கிய கவனம்செலுத்தும். இத்துடன் நிலப்பகுதிகளிலுள்ள ஆறு போன்ற உள்நாட்டு நீர்ப்போக்கு வரத்துகளும் நாடு முழுவதும்,துறைமுகங்கள் அனைத்தையும் சென்றடைவதற்கு வசதியாக மேம்படுத்தப்படும்.