குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் பணிகளும்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்திய அரசின் அனைத்து நிர்வாக பணிகளும் இவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
  • முப்படைகளின் தலைவர்களை இவரே நியமனம் செய்கிறார்.
  • பிரதம மந்திரி மற்றும் அவரின் ஆலோசனைப்படி அமைச்சர்களையும் நியமனம் செய்கிறார்.
  • அட்டார்னி ஜெனரல் தலைமை நீதிபதி இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தேர்தல் ஆணையம் போன்றோரை நியமனம் செய்கிறார்.
  • மாநிலக்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • வெளிநாட்டு இந்திய தூதர்களை நியமனம் செய்கிறார் பாராளுமன்றத்தின் ஆலோசனையின் பேரில்)
  • குடியரசுத் தலைவர் குறைந்தது ஆண்டிற்கு இரண்டு முறையாவது நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்.
  • ஒவ்வொராண்டும் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் தலைமை வகித்து உரையாற்றுகிறார். இரு அவைகளையும் கூட்டவும் கலைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
  • நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் கையொப்பம் இட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
  • எந்தவொரு பண மசோதாவும் Art (110) இவருடைய ஒப்புதல் பெறாமல் தாக்கல் செய்ய முடியாது. மேலும் எந்தவொரு மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கவோ நிறுத்தி வைக்கவோ அதிகாரம் உண்டு.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]