ஜீவன்ஜோதி பீமா யோஜனா

 

Image result for Jeevan Jyoti Bima Yojana

ஜீவன்ஜோதி பீமா யோஜனா

 • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களுக்காக ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தைத் தொடங்கினார்.

 

 • இத்திட்டம் வருடத்துக்கு ரூ. 330 பிரிமியம் செலுத்தும் தொழிலாளர் களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான காப்பீட்டை அளிக்கிறது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வரன்முறைப்படுத்தப் படாத பிரிவில் வரும் தொழிலாளர்களே இத்திட்டத்தின் பயனாளிகளாவர். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்கை மட்டுமே இத்திட்டத் துக்குப் பயன்படுத்த வேண்டும்.

 

 • ஜூன் 1, 2015 முதல் மே 31, 2015 வரை இத்திட்டத்தில் சேர்வதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் திட்டத்தில் இணைபவர்கள் அதுவரையிலுமான பிரிமியம் தொகையை மொத்தமாகச் செலுத்தி காப்பீட்டின் பலனைப் பெற

 

 • காப்பீட்டுதாரர் தனது பிரீமியம் தொகையை, அவரது சேமிப்பு கணக்கு வழியாக எடுக்க வகைசெய்யும்படி ஏற்பாடு செய்யவேண்டும். மேலும் மருத்துவரிட மிருந்து பெற்ற உடல் தகுதி சான்றிதழை அளிக்கவேண்டும். ஏதாவதொரு காரணத் தால் ஒரு நபர் காப்பீட்டு வரம்பிலிருந்து விடுபடும் பட்சத்தில், விலகியிருந்த காலகட்டத்துக்கான பிரீமியம் தொகை முழுவதையும் செலுத்தி, கூடவே உடல் தகுதி சான்றிதழையும் சமர்ப்பித்து திட்டத்தில் மீண்டும் இணைந்துகொள்ளலாம்.

 

 • இத்திட்டத்தின் விதிகளின்படி காப்பீட்டாளர் அசம்பாவிதமாக இறந்து போகும் பட்சத்தில், அவரால் பயனாளராக நியமிக்கப்பட்டவர் ரூ. 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டு தொகையைப் பெறுவார்.

 

 • பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவுக்காக சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே ரூ. 330 ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும். இத்தொகை ஒவ்வொரு ஆண்டும் மே 30 அல்லது அதற்கு முன்னதாகவோ பிடிக்கப்படும்.

 

 • தகுதிவாய்ந்த மருத்துவரின் உடற்தகுதி சான்றுடன் மொத்த பிரீமியம் தொகை யையும் ஒரே தடவையிலும் செலுத்தலாம்.

 

 • காப்பீடு கோரும் சந்தாதாரர் 18 – 50     வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.

 

 • இந்தியாவின் ஏதோவொரு இடத்தி லுள்ள வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

 

 • சந்தாதாரர் ஆண்டுதோறும் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியம் தொகையை பிடித்துக்கொள்ள எழுத்துப் பூர்வமான ஒப்புதலளிக்க வேண்டும். மேலும் அப்படி தொகை பிடித்தம் செய்யப்படும்போது கணக்கில் தேவை யான குறைந்தபட்ச இருப்பு தொகையைப் பேணவேண்டும்.

 

 • இத்திட்டத்தில் இணையும்போது, தனக்கு எந்தவொரு தீவிர, மோசமான மருத்துவப் பிரச்சினைகளில்லையென உறுதிமொழி அளிக்கவேண்டும்.

 

 • காப்பீட்டாளர் 55 வயதை எட்டினால் காப்பீட்டின் பலன் கிடைக்காது. உண்மையில் 50 வயதைத் தாண்டினாலே பலன் கிடைப்பது சாத்தியமல்ல.

 

 • ஏதோ ஒரு காரணத்தால் உங்களது வங்கிக் கணக்கு முடிவுக்கு வந்தால், காப்பீட்டின் பலன் உங்களுக்குக் கிடைக்காது. ஏனெனில் காப்பீட்டுக்கான பிரீமியம் உங்கள் வங்கிக் கணக்கு வழியேதான் செலுத்தப்படுகிறது.

 

 • அரசு ஒரு நபருக்கு ஒரு காப்பீட்டையே அறிவித்துள்ளது. ஒருவர் பல வங்கிக் கணக்கை வைத்திருந்து, ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு காப்பீட்டை பெற முயற்சிப்பது வெளிப்படும் பட்சத்தில் பலன் கிடைக்காது.

 

 • காப்பீட்டாளர் தன் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டாலும் பலனில்லை. எனினும், அந்நபர் பாக்கியுள்ள பிரீமியம் தொகையை முழுமையாய் செலுத்தி, தகுந்த மருத்துவரிடம் உடற்தகுதி சான்றிதழ் வாங்கியளித்தால் அவர் திட்டத்தில் மீண்டும் இணைக்கப்படுவார்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.