Pradhan Mantri Awas Yojana

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Pradhan Mantri Awas Yojana

  • “2022-க்குள் அனைவருக்கும் வீடு’ திட்டத்துக்கான புதிய பெயரே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ஆகும். இத்திட்டம் இந்திய அரசால் 2015, ஜூன் 25-அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டு களுக்குள் (2015-2022) இந்தியா முழுவதும் தோராயமாக இரண்டு கோடி வீடுகளை கட்டிமுடிப்பது எனும் பிரதமரின் குறிக்கோளின்படி இத்திட்டம் உருவானது.
  • வீடற்ற நபர்களுக்கு தங்குமிடத்தை உருவாக்கித் தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறைந்த வருவாய் உடைய வர்கள், பொருளாதார நலிவுற்றோர் ஆகியவர்கள் பலனுடைய இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இந்திய அரசு மூன்று கட்டமாக இவ்வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது.
  • முதல் கட்டமாக ஏப்ரல் 2015-இல் தொடங்கி மார்ச்-2017 வரை வீடுகள் கட்டப்படும். இரண்டாம் கட்டமாக ஏப்ரல்-2017 -இல் தொடங்கி மார்ச் 2019 வரை வீடுகள் கட்டப்படும். இக்கால கட்டத்தில் 200-க்கும் அதிகமான நகரங்களில் இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டியெழுப்பப்படும்.
  • மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 2019-இல் தொடங்கி மார்ச்-2022 வரை கட்டுமானப் பணி நடைபெறும். இக் கடைசி கட்டத்தில், விடுபட்ட அனைத்து நகரங்களிலும் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • அட்டவணை ஜாதியினர், பழங்குடியினர், பெண்கள், பொருளாதாரரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத் தின் கீழ் பெருமளவு ஊக்கத் தொகைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் இப்புதிய வீட்டுத் திட்டத்தில் தோராயமாக ஒரு லட்சம் முதல்3 லட்சம் ரூபாய் வரை ஊக்கதொகை பெறுவர்.

சிறப்பம்சங்கள்

  • இத்திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கப் படும்போது, தரைத்தளத்தில் முதியோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யும் அனைவரும், பதிவு செய்யும்போது தங்களது தாய் அல்லது மனைவியின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.
  • குடியிருப்பு கடன் தொகைக்கான5 சதவிகித வட்டியுடனான ஊக்கத் தொகை, அனைத்துப் பயனாளிகளுக்கும் பதினைந்து ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும்.
  • இத்திட்டத்தின்கீழ் எழுப்பப்படும் வீடுகள், நீடித்த சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும்.
  • இந்த அரசுத்திட்டத்தின் கீழ் குடியிருப்புக் கடனுக்கான சமப்படுத்தப்பட்ட மாதத் தவணை (ஊஙஒ) கணிசமான அளவுக்கு குறைக்கப்படும். பொதுவாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்5 சதவிகிதம் இந்த வட்டி விகிதத்தில், பதினைந்து வருடங் களுக்கு, ஆறு லட்ச ரூபாய்க்கு மாதத் தவணை கணக்கிட்டால் தோராயமாக ரூ. 6,632 என்ற அளவில் வரும். மாறாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 6.5 சதவிகிதம் என்பதால், மாதத்தவணை கிட்டத்தட்ட ரூ. 4,050 என்ற அளவிலேயே வரும். ஆக ஒவ்வொரு தவணையிலும் பயனாளிக்கு ரூ. 2,000 வரை லாபம்.
  • அத்தோடு மத்திய அரசு அளிக்கும் ரூபாய் 1 லட்சமும் பயனாளிக்குக் கிடைக்கும்.
  • குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கு50 சதவிகிதம் என்ற குறைந்தபட்ச வட்டியோடு, மான்ய திட்டத்தின் கீழ் கடனுதவியும் அளிக்கப்படும்.
LATESTS GOVERNMENT JOBS