Review Score0

வறுமை:

  • வறுமை என்பது ஒருவர் தனக்கு தேவைப்படும் அளவு அல்லது சமூகத்தால் தேவை என கருதப்படும் அளவு பணமோ அல்லது வேறு பொருள் உடைமைகளோ இல்லாதிருக்கும் ஒரு நிலையாகும்.
  • சமூகத்தின் ஒரு பிரிவினர் தங்களின் அடிப்படை ஆதாரங்களை அல்லது வாழ்க்கையின் மிக குறைந்த பட்ச தேவைகளைக் கூட நிறைவு செய்யவியலாத ஒரு சமூக நிலை வறுமை எனலாம்.

வறுமையின் வகைகள்:

  1. முழு வறுமை
  2. ஒப்பீட்டு வறுமை

முழு வறுமை:

  1. குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுகிறது.
  2. ஒருவரின் வருவாய் அல்லது நுகர்வு செலவுகள் மிகவும் குறைந்த உயிரிவாழ்தலுக்கு தேவையான அடிப்படை செலவுகளைக் கூட அவரால் செய்யவியலாது.

ஒப்பீட்டு வறுமை:

  1. இந்நிலை முற்றிலும் வறுமை இல்லாத அல்லது குறைந்தளவு வறுமை காணப்படும் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும்.
  2. இந்நிலையிலுள்ள தனிமனிதர்கள், குடும்பங்களின் வருவாய் மற்றும் பிற ஆதாரங்களின் வேலைவாய்ப்பு, உழைப்பு ஆகியவை அவர்கள் வாழக்கூடிய சமுதாயத்தின் சராசரி வாழ்க்கை தரத்தைவிட மிகக் குறைந்து காணப்படும்.
Click Here To Get More Details