பொது | pothu - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

பொது | pothu

 tamil-grammar

 • இலக்கண முறைப்படி பேசுதலும் எழுதுதலும் வழாநிலை ஆகும்.
 • வழாநிலை என்பதற்கு ‘இலக்கணப்பிழையற்ற முறை’ என்பது பொருளாகும். (வழு – பிழை)

(ஆ) வழு

 • இலக்கண முறையின்றிப் பேசுதலும் எழுதுதலும் வழுவாகும்.
 • திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, வினாவழு, விடைவழு, மரவு வழு என ஏழு வகைப்படும்.
 1. நீ வந்தான்

முன்னிலைப் பெயர் படர்க்கைக் வினைகொண்டு முடிந்ததால் இடவழுவாயிற்று.

 1. நேற்று வருவான்

நேற்று என்னும் இறந்தகாலப்பெயரோடு வருவான் என எதிர்கால வினை மயங்குவதால் கால வழுவாகும்.

 1. ஒரு விரலைக் காட்டிச் சிறிதோ? பெரிதோ? என வினாவுவது வினாவழுவாகும். இரண்டு விரல்களைக் காட்டினால்தான் ஒப்பிட்டுச் சிறிதென்றோ பெரிதென்றோ கூறுவியலும் ஆதலால் இது வினாவழுவாயிற்று.

 

 1. பாட்டுக்கோட்டைக்கு வழி யாது?

என்னும் வினாவிற்குக் கொட்டைப்பாக்கு கிலோ ஐம்பது ரூபாய் என்று விடை கூறுவது விடை வழு. வினாவிற்கேற்ற விடையின்மையால் விடைவழுவாயிற்று.

 

 1. குயில் கத்தும்

என்பது மரபு வழு. குயில் கூவும் என்பதே மரபாத-ன் கத்தும் என்று கூறுவது வழுவாயிற்று.

 

(இ) வழுவமைதி

 • இலக்கண முறையின்றி அமைந்ததேனும் ஒரு காரணங்கருதி இலக்கண முடையதைப்போல ஏற்றுக்கொள்வது வழுவமைதியாகும்.

திணைவழுவமைதியும் பால் வழுவமைதியும்

 • உவப்பு, உயர்வு, சிறப்பு, சினம், காரணமாகத் தினை வழுவும் பால் வழுவும் வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

 

 1. ஒரு பசுவினை “என் அம்மை வந்தாள்” என்பது திணை வழுவாயினும் உவப்பின் காரணமாக வழுவமைதியாயிற்று.
 2. செல்வன் வந்தார். – இதில் ஆண்பாற் பெயர் பலர்பால் வினைகொண்டு முடிவதால் பால்வழுவாயினும் உயர்வின் காரணமாக வழுவமைதியாயிற்று.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.