பொருள் | porul

tamil-grammar

  • நம் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களுமாம்.
  • அவற்றுள் அகப்பொருளாவது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தாமே தம்முள் நுகரும் இன்பத்தைப் பற்றிப் பிறர்க்குக் கூறவியலாத்தாய் அவர்தம் அகத்தாலேயே உணரக் கூடியதாத-ன் ‘அகம்’ எனப்பட்டது.
  • உள்ளத்து உணர்வால் அனுபவிக்கும் இன்பம்.
  • புறப்பொருளாவது புறத்தார்க்குக் கூறக் கூடியதாய் அமைந்த அறம், பொருள் ஆகியனப்பற்றிக் கூறுவது.

 

(அ) அகப்பொருள்

  • அகப்பொருள் பற்றிய ஒழுக்கமே அகத்திணையாகும்.
  • திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என் அகத்திணைகள் ஏழுவகைப்படும்.
  • அவற்றுள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்பன ”அன்பின் ஐந்திணை” என வழங்கப்படும்.
  • அகப்பொருளக்குரிய பொருள்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவாகும்.

 

முதற்பொருள்

 

  • நிலமும் பொழுதும் என முதற்பொருள் இருவகைப்படும்.

 

நிலம்

  • குறிஞ்சி – மலையும் மாலைசார்ந்த இடமும்
  • முல்லை – காடும் காட்டைச் சார்ந்த இடமும்
  • மருதம் – வயலும் வயல்சார்ந்த இடமும்
  • நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • பாலை – வறண்ட சுரமும் சுரஞசார்ந்த இடமும்

 

பொழுது

  • பெரும்பொழுது, சிறுபொழுது எனப்பொழுது இரு வகைப்படும்.

 

பெரும் பொழுது

  • கார்க்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் எனப் பெரும்பொழுது ஆறுவகைப்படும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.