பிரதமரின் நய் மன்ஸில் திட்டம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Nai Manzil proposal of the Prime Minister

  • மதரஸா மாணவர்களுக்கு சம்பிரதாய மான பழைய முறை கல்வியே அளிக்கப் படுகிறது. இங்கு அளிக்கப்படும் கல்வி மதம் சார்ந்து சிறப்பானது என்றாலும், சமகால கல்வியின் அம்சங்கள் மதரஸாவில் கற்றுத் தரப்படுவதில்லை. அதனால் இங்கு பயில்பவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

 

  • இப்பிரச்சினைக்கு தீர்வுகாணவே மத்திய அரசு நய் மன்ஸில் திட்டத்தை ஏற்படுத்தியது. இத்திட்டம் சமகாலக் கல்வி முறையை இதில் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதோடு, அவர்களுக்கு திறன் பயிற்சியளித்து, மதரஸாவைவிட்டு வெளிவரும்போது வாழ்க்கையை எதிர்கொள்ள வழிவகுக்கிறது.

 

  • உண்மையில் மதரஸாக்களில் நவீன பாடங்களான ஆங்கிலம், அறிவியல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன என்பதே உண்மை. ஆனால் எல்லாமதரஸாக்களிலும் இவை கற்பிக்கப்படுவதில்லை. இத்தகைய கல்வியை வழங்குவதற்கான மத்திய. அல்லது மாநில அரசுகளின் உதவியை எல்லா மதரஸாக்களும் பெற்றிருப்பதில்லை. அத்தகைய மதரஸா மாணவர்களுக்கு சமகால கல்வி வழங்கும் அரசின் முயற்சியே இத்திட்டமாகும்.

 

  • நய் மன்ஸில் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சமகாலக் கல்வியோடு, திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இவை அவர்கள் வேலை தேடுவதற்கு உதவியாக அமையும்.

 

  • அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் சிறிதும் பெரிதுமாக மூன்று லட்சம் மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதரஸா ஒன்றுக்கு சராசரியாக நூறுபேர் இருப்பதாக கணக்கிட்டாலும், மூன்று கோடி பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவர்.

 

  • திட்டத்தின் முதற்கட்டமாக 5,000 பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு, நிறைகுறைகள் அலசப்பட்டபின் அனைத்து மதரஸாக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

 

  • இத்திட்டத்தை தொடங்கி செயல்படுத்துவதில் மௌலானா ஆசாத் கல்வியமைப்பானது முக்கிய உதவிகளை அளிக்கும் முன்னணி அமைப்பாகத் திகழும்.

 

  • சிறுபான்மையினர் நலத்துறை இத்திட்டத் துக்கான நிதி உதவிகளை அளிக்கும். இந்தியா முழுமைக்கும் இத்திட்டத்தை செயலப்படுத்த மத்திய அரசு ரூ 3,738 கோடி ஒதுக்கியுள்ளது.

 

  • இத்திட்டம் மதரஸாவில் கல்வி கற்று, ஆனால் முறையான சான்றிதழ் இல்லாத காரணத்தால் வேலைகிடைக்காத நபர்களுக்கு இத்திட்டம் உறுதுணையாக அமையும்.

 

  • கல்விப்பூர்வமான பயிற்சியை எடுக்கத் தயங்கும் நபர்களுக்கு பாதுகாவலர் பயிற்சி, தச்சு வேலை, தையல், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட வேலைகளுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]