தாவரங்களின் உலகம்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவரங்களின் உலகம்

Plants Of The World

 • தாவரங்களின் உலகம்
 • நறுமணப் பொருள்கள்
 • நார்த்தாவரங்கள்
 • மரங்கள் மற்றும் அவற்றின் பயன்கள்

தாவரங்களின் உலகம்

மருத்துவத் தாவரங்கள்

 • உணவுக்கு மட்டுமில்லாமல் நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன.
 • தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

மூலிகைகள்

 • மருத்துவக் குணங்கள் நிறைந்த தாவரங்களை நாம் மூலிகைகள் என்று சொல்கின்றோம்.

மூலிகையின் பயன்கள்

தூதுவளை

 • சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளிநீக்கும், உடல் பலம் தரும்.

கீழாநெல்லி

 • மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.

வேம்பு

 • கிருமிநாசினி, குளிர்ச்சிதரும், வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.

கற்பூரவல்லி

 • வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்

வசம்பு

 • வயிறுதொடர்பான நோய்களைத் தீர்க்கும்

மஞ்சள்

 • கிருமிநாசினி, அழகுபடுத்தல்

பிரண்டை

 • பசியைத்தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்

இஞ்சி

 • செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்

மிளகு

 • தொண்டைக் கரகரப்பை நீக்கும்
Click Here to Download