பெண்கள் முன்னேற்றத்துக்காக அடுக்கடுக்கான திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

Image result for jayalalitha plan

 

 • பெண்கள் முன்னேற்றத்துக்காக அண்ணா தி.மு.க. ஆட்சியில் அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தபட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா புள்ளி விவரங்களுடன் பட்டியல் போட்டு காட்டினார்.
 • முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 9–ந்தேதி சென்னை தீவுத்திடலில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இதனை அடுத்து விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று 6–வது நாளாக சேலத்தில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். இங்கு கொளுத்தும் வெயிலில் லட்சோபலட்சம் மக்கள் எழுச்சியுடன் திரண்டிருந்தனர்.
 • கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், அண்ணா தி.மு.க. ஆட்சியில், பெண்கள் முன்னேற்றம் பற்றி சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 • பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்பட வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவைகளை செய்வதால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்வு வளம் பெறும் என்றாலும் இவை மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்கள் அல்ல. எனவே தான் சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், மின்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், தொழிற்சாலைகள் நிறுவப்படுவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்த வளர்ச்சி சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பங்கு கொள்ளும் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மகளிர் மேம்பாட்டில் முன்னோடி

 • எனவே தான், பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வு மேம்படவும், பெண் உரிமை நிலைநாட்டப்படும் வகையிலும், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், பல்வேறு திட்டங்களை நான் தீட்டி செயல்படுத்தி வருகிறேன். எனவே தான், மகளிர் மேம்பாட்டில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
 • எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை, தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை குழந்தையின் பெயருக்கு முன்னால் முதல் எழுத்தாக பயன்படுத்த வழி செய்யும் ஆணை, குடிமகள் என்ற பெயரை பயன்படுத்த வழி செய்யும் ஆணை, வீர தீர செயல் புரியும் பெண்களை பாராட்டும் வகையில் கல்பனா சாவ்லா விருது( என, பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கையெழுத்திட்ட ஏழு உத்தரவுகளில்

 • உங்கள் ஆதரவினைப் பெற்று 2011-ம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட ஏழு உத்தரவுகளில், 4 உத்தரவுகள் மகளிர் மேம்பாட்டிற்காகத் தான்.
 • அரசு பணி புரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளங் குழந்தைகளை பேணும் வகையில், மகப்பேறு விடுப்பை 3 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட உத்தரவு;
 • பெண்களின் திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் உத்தரவு; பட்டப் படிப்பு மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை இரு மடங்காக்கி 50,000 ரூபாய் மற்றும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் என்று வழங்கப்படும் திருமண உதவித் திட்ட உத்தரவு; கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் என இரு மடங்காக உயர்த்தி வழங்கும் உத்தரவு, ஆகிய உத்தரவுகளை முதல் நாளே நான் கையெழுத்திட்டு வெளியிட்டேன்.
 • பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவு திட்டம், தொடர் கல்வி திட்டம், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளிகள் கல்லூரிகள் என திட்டங்கள் என்னால் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 • பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா கல்வி, விலையில்லாமல் அனைத்து உபகரணங்கள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள், மடிக்கணிணிகள், கல்வி ஊக்கத் தொகை என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதன் காரணமாகவும், புதிய கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் மகளிருக்கென கல்லூரிகள் துவங்கப்பட்டதாலும், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
 • கல்லூரிகளில் படிக்கும் பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை அதிகரித்ததன் காரணமாக, மேற்படிப்பு படிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 • எனவே தான், 2011–-12-ம் ஆண்டில் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பெண்களில் 28 சதவீதம் பேர் தான் பட்டதாரிகள் என்றிருந்த நிலை மாறி, கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்ற பெண்களில் 49 சதவீதம் பேர் பட்டதாரிகள் என உயர்ந்துள்ளது.
 • மகளிர் சுகாதாரம் பேணும் வகையில், பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. எனது முந்தைய ஆட்சி காலத்தில் மகளிரின் சுகாதார தேவைகளை நிறைவேற்றும் வகையில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 750 சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு வளாகத்திலும் கழிப்பறைகள், குளியல் அறைகள், துணி துவைக்கும் மேடை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. சானிட்டரி நாப்கின்களை சுகாதாரமான முறையில் அழிக்க எரியூட்டிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் முந்தையை மைனாரிட்டி திமுக ஆட்சியில், இந்த வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் இவை பயனற்றுப் போயின.

12,796 மகளிர் சுகாதார வளாகம்

 • 2011-ம் ஆண்டு நான் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள் 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டன. இதனால் பெண்கள் பல நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
 • கருவுற்ற தாய்மார்கள் உடல் நலம் காக்கும் வகையில், ‘அம்மா மருத்துவ சஞ்சீவி’ என்னும் மருத்துவப் பெட்டகம் வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் நலம் காக்க ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’ வழங்கப்பட்டு வருகிறது.

பாலூட்ட தனி அறை

 • பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் காரணமாக வெளியே செல்லும் போது அதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது. பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நேரங்களில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து நிலையங்கள், நகராட்சி மற்றும் நகரப் பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கென தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முழு உடல் பரிசோதனை

 • பெண்களின் உடல் நலம் பேணும் வகையில், பெண்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
 • பெண்கள் வேலைக்கு சென்று பொருளாதார நிலை உயர வேண்டுமெனில் வீட்டில் அவர்களுடைய பணிச் சுமையை குறைத்திட வேண்டும். எனவே தான், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கறவை மாடுகள்

 • கிராமப்புற ஏழை எளிய பெண்கள் தங்கள் சொந்த கால்களிலேயே நின்று வாழ்வில் வளம் பெற, விலையில்லா கறவை பசு மற்றும் 4 வெள்ளாடுகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 • மகளிர் தையல் தொழில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன ரக தையல் யந்திரங்கள் வாங்க 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
 • மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்காக, என்னால் 1991-ம் ஆண்டில் துவங்கப்பட்ட முன்னோடி திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஆகும். 6 லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழுக்கள் மூலம் 92 லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட பெரும் இயக்கமாக இது தற்போது திகழ்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 24,362 கோடி ரூபாய் அளவுக்கு சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன் 9,838 கோடி ரூபாய் தான்.

கல்லூரி சந்தை

 • சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய கல்லூரிகளில், கல்லூரி சந்தைகள் நடத்தப்பட்டு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் அங்காடிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே தொழில் செய்யும் சுய உதவி குழுக்களுக்காக, ஒத்த தொழில் தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்கும் பணிகளில் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 • 30 பிளாஸ்டிக் மறு சுழற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சுய உதவி குழுக்களால் 577 டன் பிளாஸ்டிக் துகள்கள் உருவாக்கப்பட்டு தார் சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. 3,176 சுய உதவி குழு பெண்கள் வங்கி முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதார இயக்கத்தினால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், 1,12,000 சுய உதவி குழுக்களுக்கு 25 கோடி ரூபாய் வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் தொழிற்பேட்டை

 • வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசி திட்டத்தின் கீழ் கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள் துவங்கப்பட்டுள்ளன.
 • சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற நிலையில் உள்ள மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் தொழில் துவங்குவதற்கான வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
 • 5 ஆண்டுகளில் 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ள இத்திட்டம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் 78,339 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு38 கோடி ரூபாய் பொருளாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்ட மானியம் 116.79 கோடி ரூபாய். பணிபுரியும் மகளிருக்கென 28 பணி புரியும் மகளிர் அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 14 பணி புரியும் மகளிர் விடுதிகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேலும் மேம்படும் வகையிலும், கிராமப்புற பொருளாதாரம் உயர்வடையும் வகையிலும், அரசு வாங்கும் பொருட்கள் சுய உதவிக் குழுக்களிடமிருந்து வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊக்கம்

 • சானிட்ரி நாப்கின் மற்றும் அம்மா குழந்தை நலப் பெட்டகத்திற்கான பொருட்கள் ஆகியவற்றை சுய உதவிக் குழுக்கள் தயார் செய்ய ஊக்கம் அளிக்கப்படும். அவர்களிடமிருந்தே இவை வாங்கப்படும். அதே போன்று பினாயில் போன்ற சுகாதாரப் பொருட்களை தயார் செய்யவும் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் இந்த சுகாதாரப் பொருட்களை சுய உதவிக் குழுக்களிடமிருந்து வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 • மகளிர் பொருளாதார வளர்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவத்தை அண்ணா தி.மு.க. அரசு கொடுத்து வருவதால் தான், சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக அளவு தொழில் புரியும் மகளிர் தமிழ் நாட்டில் தான் உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதாவது, மகளிர் தொழில் புரியும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

பாலியல் குற்றங்களை தடுக்கும் 13 அம்ச திட்டம்

 • பெண்களுக்கெதிரான குற்றங்களை ஒடுக்கும் வகையில், ‘தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்பு சட்டத்தின்’ கீழ் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கான தண்டனைகளை 2002-ம் ஆண்டில் நான் கடுமையாக்கினேன். இதன்படி துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை ஆகியவற்றில் குற்றமற்றவர் என்று மெய்ப்பிக்கும் பொறுப்பு குற்றவாளிகளை சார்ந்ததாக மாற்றப்பட்டது. பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு 13 அம்ச திட்டம் ஒன்றை எனது அரசு செயல்படுத்தி உள்ளது.
 • பெண்களைப் பாதுகாப்பதில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துவதால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ் நாட்டில் குறைவாகவே உள்ளன. பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகளில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டம் ஒன்றை 2014-ம் ஆண்டு எனது அரசு இயற்றியுள்ளது.

சிறப்பு சட்டங்கள்:

 • ‘சதி’ பாதுகாப்புச் சட்டம் 1987
 • வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
 • பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் 1986
 • நெறிகெட்ட செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1956
 • பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005

மே 8-ம் தேதிசர்வதேச மகளிர் தினம்.

 • பெண்களின் சமூக நலத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நமது சமுதாயத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகவே தொடர்கிறது. அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளால், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், ஒழிந்தபாடில்லை.

 

 

MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.