முதல் முறையாக ‘பிங்க்’ பந்து, மின்னொளியில் துலீப் டிராபி கிரிக்கெட்: ஆக. 23ல் தொடக்கம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இளஞ்சிவப்பு பந்து உபயோகிக்கப்படுவதுடன் மின்னொளியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த தொடரில் இந்தியா சிவப்பு, நீலம், பச்சை என மூன்று அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று 4 நாள் போட்டியாகவும், இறுதிப் போட்டி மட்டும் (செப். 10-14) 5 நாள் கொண்டதாக நடத்தப்படுகிறது.

 

 • சிவப்பு அணிக்கு யுவராஜ் சிங், நீலம் அணிக்கு கவுதம் கம்பீர், பச்சை அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச போட்டிகள் அதிகம் இருந்ததால் கடந்த ஆண்டு துலீப் டிராபி தொடர் கைவிடப்பட்டிருந்த நிலையில், 2016 சீசனில் வண்ணப் பந்துடன் மின்னொளியில் போட்டிகள் நடக்க உள்ளன. அனைத்து ஆட்டங்களும் டெல்லி, கிரேட்டர் நொய்டா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும்.

 

 • ஆக. 23-26: இந்தியா சிவப்பு – இந்தியா பச்சை
  ஆக. 29-செப்.1: இந்தியா சிவப்பு – இந்தியா நீலம்
  செப். 4-7: இந்தியா நீலம் – இந்தியா பச்சை
  செப். 10-14: இறுதிப் போட்டி

 

 • இந்தியா சிவப்பு: யுவராஜ் (கேப்டன்), அபினவ் முகுந்த், கே.எஸ்.பரத், சுதீப் சாட்டர்ஜி, குர்கீரத் சிங், அங்குஷ் பெய்ன் (கீப்பர்), அருண் கார்த்திக், அக்‌ஷய் வாகரே, குல்தீப் யாதவ், நாது சிங், அனுரீத் சிங், ஈஷ்வர் பாண்டே, நிதிஷ் ராணா, எம்.அஷ்வின், அபிமன்யு மிதுன்.

 

 • இந்தியா நீலம்: கம்பீர் (கேப்டன்), மயாங்க் அகர்வால், ஷெல்டன் ஜாக்சன், பாபா அபராஜித், சித்தேஷ் லாட், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), பர்வேஸ் ரசூல், மோனிஷ், கிருஷ்ண தாஸ், சூரியகுமார் யாதவ், மோகித் ஷர்மா, பங்கஜ் சிங், ஷர்துல் தாகூர், செதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி.இந்தியா பச்சை: ரெய்னா (கேப்டன்), முரளி விஜய், ராபின் உத்தப்பா, ஜலஜ் சக்சேனா, அம்பாதி ராயுடு, இயான் தேவ் சிங், ரோகன் பிரேம், பார்திவ் பட்டேல் (கீப்பர்), ஹர்பஜன் சிங், ஷ்ரேயாஸ் கோபால், அஷோக் டிண்டா, சந்தீப் ஷர்மா, அங்கித் ராஜ்பூட், ராஜா பலிவால், ஜஸ்பிரித் பூம்ரா.