ஒளிமின் விதிகள் | tnpsc study materials

Review Score0

maanavan physics

 1. எந்த அதிர்வெண்ணுக்கு கீழ் ஒளிமின் உமிழ்தல் முற்றிலும் நின்று விடுகிறதோ, அச்சிறும அதிர்வெண், பயன்தொடக்க அதிர்வெண் என வரையறுக்கப்படுகிறது.
 2. ஒளிமின் நிகழ்வு ஓர் உடனடி நிகழ்வாகும். கதிர்வீச்சு படுவதற்கும் எலக்ட்ரான் உமிழப்படுவதற்கும் இடையில் காலப்பின்னடைவு இருக்காது.
 3. குறிப்பிட்ட ஒளி உணர்திறன் மிக்க பொருளிற்கு, படுகதிர் வீச்சின் அதிர்வெண் ஆனது பயன்தொடக்க அதிர்வெண்ணைவிட அதிகமாக இருக்கம் போது, ஒளி மின்னோட்டமானது படுகதிரின் செறிவுக்கு நேர்தகவில் இருக்கும்.
 4. ஒளி எலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றல் படுகதிரின் அதிர்வெண்ணுக்கு நேர்தகவிலிருக்கும். ஆனால் செறிவைச் சார்ந்தது அல்ல.

 

 • ஐன்ஸ்டீன் ஒளிமின் சமன்பாட்டை சோதனை மூலம் சரிபார்த்தவர் மில்லிகன்
 • ஒளிமின்கலன்கள் ஒளியாற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.

 

ஒளிமின் கலன்களின் வகைகள்

 1. ஒளி உமிழ் மின்கலம்
 2. ஒளி வோல்டா மின்கலன்
 3. ஒளி கடத்தும் மின்கலம்

பயன்கள்

 • திரைப்படத்துறையில் ஒலியினை மீட்க
 • உலைகளில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த
 • தெருவிளக்குகளைத் தானாக இயக்க
 • திருடர் அறிவிப்பு மணி மற்றும் தீ அறிவிப்பு மணியில்

பருப்பொருள் அலைகள்

 • சோதனை மூலம் சரிபார்த்தவர்கள் டேவிசன்,ஜெர்மர்
 • அணுவைப் பற்றிய அலை எந்திரவியல் கருத்து நிலைத்தன்மை பெற்ற பாதையின் சுற்றளவு (2rr)டி பிராக்லி அலைநீளத்தின் முழு எண் மடங்காகும்

    

  2rr=nλ

   =n-h/mv or

   mvr = nh/wr

இது போரின் எடுகோள். எனவே, பிராக்லி சொன்னது சரியாகிறது

 

Click Here To Get More Details