பெரியார்

maanavan

வேறு பெயர்கள்:

       இராமசாமி, ஈ.வெ.இரா., பெரியார் (அ) தந்தை பெரியார், வைக்கம் வீரர், ஈ.வெ.இராமசாமி நாயக்கர்.

பிறப்பு    :              செப்டம்பர் 17, 1879

பிறந்த இடம்  :         ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு  :               திசம்பர் 24, 1973 (அகவை 94)

இறந்த இடம்   :         வேலூர், தமிழ்நாடு, இந்தியா

இயக்கம்:              சுயமரியாதை இயக்கம், திராவிட தேசியம்

முக்கிய அமைப்புகள் : இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம்

குறிப்பிடத்தக்க விருதுகள் : யுனஸ்கோ (1970)[நேரடிச் சான்று தேவை]

முக்கிய நினைவுச்சின்னம் : பெரியார் – அண்ணா நினைவு இல்லம், தந்தை பெரியார் நினைவகம்

மதம்:     இறை மறுப்பாளர்

  • பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. ராமசாமி நாயக்கர், 1879 – டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
  • தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்
  • இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறை மறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் “புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது நேரடிச் சான்று தேவை
  • இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.