இந்தியா விடுதலைப் போரில் புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியா விடுதலைப் போரில் புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி

Partition of India in the Development of Revolutionary Movements

 • இந்தியா விடுதலைப் போரில் புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி
 • அரசியல் கொலைகளும் ரகசிய அமைப்புகளும்
 • வெளிநாட்டில் புரட்சி இயக்கங்கள்
 • கதார் இயக்கம் பற்றிய வரலாற்று மதிப்பீடு
 • ரகசிய சங்கங்களும் அவற்றை தொடங்கியவர்களும்
 • இந்தியாவின் புரட்சி இயக்கங்கள்
 • பகத்சிங்
 • தேசபக்த புரட்சியாளர்கள் – சில தேர்வு குறிப்புகள்

இந்தியா விடுதலைப் போரில் புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி

 • சூரத் காங்கிரஸ் பிளவுக்குப்பின் (1907) பாலகங்காதர திலகர், தீவிரவாத காங்கிரஸ் பிரிவின் தலைவராகத் திகழ்ந்தார். லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால், பால கங்காதர திலகர் ஆகிய மூவரும் Lal, Pal, Bal என முப்பெரும் தலைவர்களாக உருவெடுத்தனர்.
 • இவர்களின் தீவிரவாதம் கருத்து தீவிரவாதம் ஆகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையும் சுயராஜ்ய கோட்பாட்டையும் ஆங்கில அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்களிடையே எடுத்துச் செல்வதையும், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டுவதையுமே இவர்கள் குறிக்கோளாய் கொண்டிருந்தனர்
 • கருத்து தீவிரவாதிகளின் பரப்புரைகளால் கவரப்பட்ட தேசபக்திமிக்க இளைஞர்கள் பலர் ஆங்கில ஆட்சிக்கு எதிரான புரட்சியாளர்களாக மாறினர் துப்பாக்கித் தத்துவத்தில் நம்பிக்கை வைத்து வன்முறை வழியில் சென்று ரகசிய அமைப்புகளை ஏற்படுத்தி இந்தியாவைப் பிரிட்டீஷாரின் பிடியிலிருந்து விடுவிக்க இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் முயற்சிகளை மேற்கொண்டவர்களை அதிதீவிரவாதிகள் என்றும் தேசபக்த புரட்சியாளர்கள் என்றும் இருவேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். 
 • இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே மாறுபட்டு முரண்பட்டாலும் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால், அதிதீவிரவாதிகள் வன்முறை வழியில் தங்கள் லட்சியத்தை அடைய விரும்பினர். இவர்களை ஒப்பிட்டுக் கூறும்போது மிதவாதிகளும் தீவிரவாதிகளும் காங்கிரஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து போராடிய அரசியல் பங்காளிகள்  ஆனால் அதிதீவிரவாதிகள் காங்கிரசுக்கு வெளியே இருந்து அரசியல் கொலைகள் செய்து போராடிய தேசியவாதிகள் என்பார். க. வெங்கடேசன்
 • ஒத்துழையாமை இயக்கத்தின் தோல்வியும் ரஷ்ய புரட்சியை மையமாகக் கொண்டு சோஷலிஸ்டுகளால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களும் இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தன என்பார் பிபின் சந்திரா.

 

Click Here to Download