Paripadal | TNPSC | TET Study Materials | பரிபாடல்
Review Score+11

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகைகளில் ஒன்று.
  • எனவே பாவகைகளால் பெயர் பெற்ற நூல் பரிபாடல்.
  • எட்டுத்தொகை நூல்களிலேயே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்..
  • பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
  • தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
  • எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.
  • பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
  • பரிப்பாடல் 7௦ பாடல்களை கொண்டது.
  • பரிபாடலை தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிப்பாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
  • பரிப்பாடலை முதலில் பதிப்பித்தவர் .வே.சாமிநாதையர்.
    பரிபாடல் கூறும் செய்திகள் அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும்.
  • தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.
  • நெய்தல்,குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம், என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.
  • உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் பரிபாடல்.
  • பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

தொகுப்பு

  • பரிபாடல் பின்வரும் பாடலின் துணைகொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:
  • பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்,
  • செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்,
  • காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொள்ளவைக்கு) 1 பாடல்,
  • படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்,
  • பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.

 

Click Here To Get More Details