ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார்.

Rio de Janeiro: Indian shuttler Pusarla V Sindhu celebrates her win in women’s singles quarter-finals match against world No.2 Wang Yihan of China in 2016 Summer Olympics at Rio de Janeiro in Brazil on Tuesday. Sindhu win the match 22-20, 20,19. PTI Photo by Atul Yadav(PTI8_17_2016_000038A)

  • அவரை எதிர்த்து ஆடிய கரோலினா  மரினிடம் 21-19, 12-21, 15-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
  • முன்னதாக நேற்று இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுஹரா நஸோமியை, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின்  பி.வி.சிந்து, ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின்  கரோலினா மரின், 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான வீராங்கனையான அவரது சவாலை எதிர்த்து விளையாடிய  சிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் வெள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக  நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை  தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு இது 2வது பதக்கமாகும்.
  • ஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். அவை அனைத்துமே வெண்கலம். தற்போது பி.வி.சிந்து வெள்ளி வென்ற  இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் வெண்கலம் அல்லாத பதக்கத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற  பெருமைக்கு பி.வி.சிந்து சொந்தக்காரரானார்.

    பி.வி.சிந்து – கரோலினா மரின் நேருக்கு நேர்
  • பி.வி.சிந்துவும், கரோலினா மரினும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், கரோலினா மரின் 5, பி.வி.சிந்து 3 முறை வென்றுள்ளனர்.