ஓசோன் அழிந்தால் ஓராயிரம் ஆபத்து!

Image result for Ozone is a thousand risk of perish !

 

  • ஓசோன்- இந்த வார்த்தையை நம் அனைவரும் அறிவோம். ஓசோன் வளிமண்டலத்தை சுற்றியுள்ள ஒரு படலம். நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வதற்கு முக்கிய காரணம் இந்த ஓசோன் படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய புற ஊதாக் கதிர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

 

ஓசோன் படலம்

  • நம் உயிர் வாழ இன்றியமையாத, நமக்கு சுவாச வாயுவாக திகழும் ஆக்ஸிஜனின்(O2) மற்றொரு வடிவம்தான் ஓசோன். இது இரண்டு ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை (03) கொண்டது.ஓசோன் வாயுப் படலம் பூமியிலிருந்து 60 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. ஓசோன் வாயு படலமாக பூமியிலிருந்து 50கிமீ உயரம் வரை பரவி, 20லிருந்து 25கிமீ வரை அடர்த்தியாக பரவியுள்ளது. இதன் மிக முக்கிய பணி, சூரியன் அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என இரு வகையான கதிர்களை வெளியிடுகிறது. இதில் அகச்சிவப்பு கதிர்கள் பூமிக்கு வெப்பத்தை கொண்டு செல்கின்றது. புற ஊதாக் கதிர்களிடமிருந்து வரும் கதிர்களை 99% ஈர்த்து, பூமியை பாதுகாத்து நம்மை நோயிலிருந்து காப்பாற்றும் பணியை ஓசோன் செய்து வருகிறது. இது ஒரு வேதிவினை போல நடைபெறுகிறது.

 

ஓசோன் எவ்வாறு சேதமடைகிறது?

  • ஓசோனில் துளை இருப்பதும், ஓசோன் சேதமடைவதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் என்பதும் 1985ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குளோரோ புளூரோ கார்பன், அன்றாடம் நாம் உபயோகிக்கும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், தொழிற்சாலை ஆகியவற்றில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வெளியேறும் வாயு, நூறு வருடம் வரை அப்படியே இருக்கும். சூரியக்கதிர்கள் வாயுவின் மீது படும்போது நடைபெறும் வேதியல் மாற்றத்தால், ஓசோன் ஆக்ஸிஜனை இழுத்துக்கொண்டு கார்பன் மோனாக்சைடாக மாறுகிறது. இதனால் வளி மண்டலம் முழுவதுமாக சிதைக்கப்படுகிறது. இந்த காரணங்களுக்காக 1987 ஆம் ஆண்டு இந்த குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக குளோரின் இல்லா ஹைட்ரோ புளுரோ கார்பன், குளிர்சாதனப் பெட்டியில் உபயோகிக்கப்படுகிறது.

 

பயன்கள்

  • ஓசோன் படலம் புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களிலிருந்து பூமியை காப்பாற்றுவதோடு, மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கிறது.

 

ஓசோன் வாயு அழிவதால் ஏற்படும் விளைவுகள்

  • ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும் நிலை உருவானால், பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து, நில பரப்பு அழிந்து, அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். மிகவும் முக்கியமாக ஓசோன் வாயுக்கள் அழிந்தால் மனிதர்களையும், விலங்குகளையும் புற ஊதாக் கதிர்கள் எளிதில் நேரடியாகத் தாக்கும். இதனால் தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும்.

 

  • இது மனிதர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் விட்டு வைக்காது. தாவரங்களின் உற்பத்தி திறனை குறைத்து தாவரங்களை மலடாக்கிவிடும். கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் இதனால் இறக்கும் அபாயம் உள்ளது.

 

 

  • ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. இதற்கு காரணம் ஓசோன் மண்டலம் சிறிது சிறிதாக வலுவிழந்து வருவதே ஆகும்.

 

 

ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பது எப்படி?

  • குளுரோ புளுரோ கார்பன் பயன்படுத்துவதை தவிர்த்தாலே நாம் ஓசோன் சேதமடைவதை பாதி நிறுத்தி விடலாம். இதற்கு தடை விதித்த போதிலும், பல நாடுகளில் இன்றும் இதை பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். இதை தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தற்போது பருவ நிலை மாறுகிறது. இதன் காரணம் ஓசோன் படலமும் புவி வெப்பமயமாதலுமே ஆகும். மரத்தை வெட்டி, காடுகளை அழித்து, புவிவெப்பமாதலுக்கு வழிவகுக்கின்றனர். மரங்களை அதிகளவில் வளர்த்து காடுகளை காத்தால், புவிவெப்பமயமாதலை தடுப்பதோடு, வளிமண்டலத்தையும் காக்கலாம்.எனவே இன்றிலிருந்து நாம் சுற்றுசூழலை காப்போம் என உறுதி ஏற்போம்!
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.