Review Score0

ஆக்சிஜன்

  • ஷீலே என்பவர் இத்தனிமத்தை 1773-ம் ஆண்டு கண்டுபிடித்தார். லவாய்சியர்
  • இதனுடைய பண்புகளைக் கண்டுபிடித்தார்.
  • இது மற்ற தனிமங்களுடன் சேர்ந்து அமிலங்களை உண்டாக்குவதால் இதற்கு
  • ஆக்சிஜன் என்று லவாய்சியர் பெயரிட்டார்.
  • காற்றை நீர்மமாக்கி அதிலிருந்து ஆக்சிஜனை பின்னக் காய்ச்சி வடித்தல் முறையில் பெறலாம். இதற்கு கிளாடி முறை (Claude Process)  என்று பெயர். இம்முறை ஆக்சிஜனைத் தயாரிக்க அதிகமாகப் பயன்படுகிறது.
  • ஆக்சிஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.
  • இது காற்றைப்போல் 1,1053 மடங்கு கனமானது. இது நீரில் சிறிதளவே கரையும்.
  • 100 பங்கு நீரில் 5 பங்கு ஆக்சிஜன் 0 டிகிரி வெப்பநிலையில் கரைகிறது.
  • ஆக்சிஜனின் கொதிநிலை 183 டிகிரி செல்தியஸ், உறைநிலை -218 டிகிரி செல்சியஸ்.
  • மற்ற தனிமங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து உண்டாகும் இரு தனிமச் சேர்மங்களை ஆக்சைடுகள் என்கிறோம்.
  • அமில ஆக்சைடுகள் பொதுவாக அலோக ஆக்சைடுகளாக உள்ளன. கார ஆக்சைடுகள் பொதுவாக உலோக ஆக்சைடுகளாக இருக்கின்றன.
  • ஈரியல்பு ஆக்சைடுகள் காரம் மற்றும் அமிலம் ஆகிய இரண்டுடனும் வினைபுரிகிறது.
  • நடுநிலை ஆக்சைடுகள் அமிலம், காரம் ஆகிய இரண்டுடனும் வினை புரிவதில்லை.

ஆக்சிஜன் அணுவின் அணு எண் 8, அணு எடை 16 ஆகும்

Click Here To Get More Details