ஐக்கிய நாடுகள் கழக அமைப்பு

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Organization of the United Nations Association

 

 • ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. இரண்டாவது உலகப்போரின் போது எதிரி நாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடு களின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதித் தந்தார்கள். பிறகு 1945-ஆம் ஆண்டு ஐம்பது நாடுகள்  அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைப்பெற்றது.
 • அமெரிக்க, இங்கிலாந்து, சோவியத்யூனியன் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில் 1944-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஓக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவு செய்யப்பட்டது.
 • 1945-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளாமல் இருந்த போலந்து நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இட்டத்தின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51-ஆயிற்று.
 • 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் கழக தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி எல்லா நாடுகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற யால்தா (Yalta) மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக அமைப்புக்கான முடியும் அக்கழக சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களும் சர்ச்சில், ரூஸ்வெல்த் மற்றும் ஸ்டாலின் ஆகியத் தலைவர்களால் முதன்முதலிலில் ஏற்றக்கொள்ளப்பட்டன. அதற்கு சான்பிரான்சிஸ்கோ மாநாடு இறுதி வடிவம் கொடுத்து மேலே சொல்லப்பட்டபடி ஐக்கிய நாடுகள் கழகம் செயலாற்றத் தொடங்கியது.
 • ஐக்கிய நாடுகள் கழக பேரவை 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியன்று உலக மனித உரிமைகள் பிரகடனத்தை அறிவித்தது.
 • விதி 1 –  அப்பிரகடனத்தின் விதி 2-ன் படி மக்கள் அனைவரும் பிறப்பினால் சமமானவர்கள். அவர்களுக்கு மரியாதையும் உரிமைகளும் சம அளவில் உண்டு. அவர்கள் அனைவரும் அவர்கள் மனசாட்சிப்படி நடந்துக் கொண்டு மற்றோர்களை சகோதரத்துவ அன்போடு நடத்த வேண்டும்.
 • விதி 2 – ன் படி எல்லா மக்களும் இனம், நிறம், மொழி, சமயம், அரசியல் மற்றும் கருத்துக்கள் அடிப்படையிலோ ஆண் பெண் என்ற அடிப்படையிலோ வித்தியாசம் இல்லாமல் எல்லா சுதந்திரங்களையும், உரிமைகளையும் பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறது.
 • வில்சனால் வற்புறுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட உலக நாடுகள் கழகத்தின் கொள்கை பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் கழக சாசனம்  (UNO Charter)

 • ஐக்கிய நாடுகள் கழக சாசனம் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய உரிமைகள் அவை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அக்கழகத்தின் உறுப்புகள் அதைப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.

நோக்கங்கள்

 • ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தில் உலக அமைதி மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கங் களாக சொல்லப்பட்டிருக்கிறது.
 • உலகநாடுகளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துதல்.
 • பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல்.
 • சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவுத் தருதல்.
 • மேற்கூறியவற்றை அடைவதற்கு வழிவகைகள் கண்டு அவை நிறைவேற கருவியாக இருத்தல்.

அமைப்பு

 • ஐக்கிய நாடுகள் கழகத்தின் ஆறு முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை:
 • பொதுப்பேரவை
 • பாதுகாப்பு மன்றம்
 • பொருளாதார மற்றும் சமுதாய மன்றம்
 • தர்மகர்த்தா கழகம்
 • உலக நீதிமன்றம்
 • செயலகம்
 • இவைத் தவிர ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதி மன்றங்களும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான பல்வேறு இதர அமைப்புகளும் உலகெங்கும் இருக்கின்றன. இவைகளுடைய நோக்கங்களும் திட்டங்களும் உலகளாவியவை.

ஐக்கிய நாடுகள் கழக குடும்பம்

 • மேற்கூறப்பட்ட அமைப்புகளோடு குழந்தைகள் நல நிதிக் கழகம், முன்னேற்ற திட்ட குழு இன்னும் சிறப்புமிக்க இதர பிரதிநிதி மன்றங்கள் பல உள்ளன. இவையெல்லாம் உலக நாடுகளில் சமுதாய முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவைப்படும் உதவிகள் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவற்றிற்கு பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவை

 • இப்பேரவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே ஒரு வாக்கு மட்டும் தரப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு புது உறுப்பினர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய முடிவுகளை பேரவை எடுக்கிறது.

பொதுப் பேரவையின் குழுக்கள்

பேரவையில் குழுக்களின் எண்ணிக்கை ஆறு.

 • முதல் குழு, ஆயுத ஒழிப்பு மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புப் பற்றியது.
 • இரண்டாவது குழு, பொருளாதார மற்றும் நிதி சம்பந்தப்பட்டது.
 • மூன்றாவது சமூக மனிதாபிமான மற்றும் பண்பாடுப் பற்றியக் குழு.
 • நான்காவது, காலனி ஒழிப்பு மற்றும் சிறப்பு அரசியல் நிலை.
 • ஐந்தாவது நிர்வாகம் மற்றும் வரவுச் செலவுத் திட்டம் பற்றிய குழு.
 • ஆறாவது, சட்டம், நீதி பற்றிய குழு.
 • குறிப்பிட்டச் சில பிரச்சினைகள் குழுக்களின் முழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு கூட்டம் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. குழுக் கூட்டங்களில் முடிவுகள் சாதாரன பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.
 • இவ்வாறு குழுக்களால் எடுக்கப்படும் முடிவுகள் பொதுப்பேரவையின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன. பொதுப்பேரவையில் கலந்துக் கொண்டுள்ள பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பொருள்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய கருத்துக்களையும் அவற்றின் நிறைவுகளையும், குறைகளையும் எடுத்துரைக்கின்றனர்.
 • பேரவையில் விவாதங்கள், எடுத்துக் கொள்ளப்பட்டப் பொருள்களின் தராதர அடிப்படையில் நடைப்பெறுகின்றன. விவாத முடிவில் வாக்கெடுக்கப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன.
 • இவ்வாறு பொதுப் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தின் பணிகளுக்கு ஆதாரமாகும்.
 • மேல்சொல்லப்பட்டவாறு எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்படும் முறைகளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
 • ஆயுத ஒழிப்பு, அமைதி காத்தல், வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி பொதுப் பேரவையால் நியமிக்கப்படும் குழுக்கள் மற்றிம் இதர அமைப்புக்கள் இவற்றைப் பற்றி விவாதித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
 • சில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
 • ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணிபுரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

பணிகளும் அதிகாரங்களும்

பொதுப்பேரவை

பொதுப் பேரவையின் பணிகளும் அதிகாரங்களும் வருமாறு,

 • உலக அமைதி காத்தல், உலக நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதங்கள், மற்றும் போர்க் கருவிகள் பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய கொள்கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.
 • ஐக்கிய நாடுகள் கழக நிறுவனங்களின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பாதிக்கப்படும்போது அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.
 • உலக அரசியல் நடப்புகள், வளர்ச்சி, பன்னாட்டு சட்டம், மனித உரிமைகள், மனித சுதந்திரம், மற்றும் பொருளாதாரம், சமூகம், கல்வி, சுகாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் பற்றி ஆய்வு செய்தல்.
 • நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்து வைக்கக் கூடிய பரிந்துரைகள் பற்றி முடிவெடுத்தல்.
 • பாதுகாப்பு மன்றம் மற்றும் சமூக பொருளாதார மன்றம் ஆகியவற்றிற்கு தற்காலிலிகமாக நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.
 • பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுத்தல்.
 • ஐக்கிய நாடுகள் கழக பொதுச் செயலரை தேர்ந்தெடுத்து நியமித்தல்.
 • பொதுப்பேரவையின் வருடாந்திர கூட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற கூட்டத்திற்கானத் தலைவர் அப்போதே தேர்ந்தெடுக்கப்படுவார். இருபத்தொரு துணைத் தலைவர்கள், முக்கியக் குழுக்களின் தலைவர்கள் எல்லோரும் கூட்டத் தொடக்கத்திலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். பூகோள ரீதியாக ஆப்ரிக்கா, ஆசியா, மேற்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
 • ஆண்டுதோறும் நடைபெறுகின்ற முறைப்படியான கூட்டங்கள் தவிர தனிக் கூட்டங்களும் கூட்டப்படலாம். இக்கூட்டங்கள் பொதுப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அல்லது பாதுகாப்பு மன்ற உறுப்பினரில் யாராவது ஒருவர் கேட்டுக் கொள்ளும்பொழுது கூட்டப் படுகின்றன. வருடாந்திரக் கூட்டங்கள் கூடும் போது பொதுப் பேரவையில் பொதுவான விவாதங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய கூட்டங்களில் உறுப்பு நாடு களின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உலக நிலவரம், உலக அரசியல் இவை பற்றிய பிரச்சனைகளை அவர்களுடைய உரைகளில் குறிப்பிட்டு பேசுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

பாதுகாப்புச் சபை

 • பாதுகாப்புச் சபையின் தலையாயப் பொறுப்பு பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். அது அதனுடைய பணிகளை தொடர்ந்து செய்வதற்கு வசதியாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.
 • எப்பொழுதெல்லாம் அமைதிக்கு பங்கம் விளைகிறதோ, அப்பொழுதெல்லாம் பாதுகாப்புச்சபை உடனடியாக கூடி தனது பரிந்துரைகளை போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை  அமைதியான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்த முனையும். பல விஷயங்களில், பாதுகாப்புச்சபை நேரடியாகவே தனது சோதனை செய்யவும், சமாதானப்படுத்தவும் விழையலாம். பாதுகாப்புச்சபை சிறப்பு தூதுவர்களையும், பிரதிநிதிகளையும் அல்லது பொதுச் செயலாளரை அத் தூதுவர்களை நியமிக்க பணிக்கலாம். மேலும் பாதுகாப்புச் சபை அமைதியான முறையில் போரை முடிவுக்கு கொண்டு வரலாம். எப்பொழுதெல்லாம் நாடுகளுக்கிடையேயான பிணக்குகள் போருக்கு இட்டு செல்கிறதோ அப்பொழு தெல்லாம் பாதுகாப்புச்சபையின் முழு முதன் நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
 • பல நேரங்கள் பாதுகாப்புச்சபை போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்த பாடுபட்டு போட்டி நாடு களுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்கிறது. பாதுகாப்புச்சபையே ஐ.நா அமைதிப்படையை அனுப்பி அமைதியான முறையில் போரை தீர்த்து வைக்க உதவுகிறது.
 • பாதுகாப்புச்சபை அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கூட்டாக இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். ஐ.நாவின் எந்த உறுப்பு நாடு ஏதேனும் பாதுகாப்புச்சபையின் நடவடிக்கைக்கு எதிராகவோ, பணிய மறுக்கவோ செய்தால் அவ்வுறுப்பு நாட்டின் உரிமைகளையும் சலுகைகளையும் ஐக்கிய நாடுகள் கழக பொதுச் சபையிலிலிருந்து நீக்கலாம். பாதுகாப்புச்சபை ஐ.நா வின் உறுப்பு நாடுகள் ஐ.நா வின் சாசனத்தை மதிக்காமல் இருந்தால் ஐ.நா உறுப்பு நாட்டிற்கான பிரதிநிதித்துவத்தை நீக்கலாம். பாதுகாப்புச் சபையின் உறுப்பினரல்லாத ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாட்டை பாதுகாப்புச்சபையின் விவாதங்களில் பங்கேற்க அழைக்கலாம். ஆனால் அந்நாட்டிற்கு வாக்களிக்கும் உரிமையில்லை. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடையேயும், உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்க உதவுகிறது. அந்நாடுகளையும் விவாதங்களுக்கு அழைக்கலாம்.
 • பாதுகாப்புச்சபையின் தலைவர் ஆங்கில எழுத்து முறையில் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கிடையே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகள் உள்ளன என ஏற்கனவே பார்த்தோம். ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர 10 நிரந்திரமில்லாத உறுப்பு நாடுகள் பொதுச் சபையின் மூலம் இரண்டாண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்

 • அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 • ரஷ்யா
 • ஐக்கிய இங்கிலாந்து
 • பிரான்ஸ்
 • சீனா
 • ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வாக்கு என்ற முறையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. அந்த 9 வாக்குகளில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் வாக்குக் கட்டாயம் தேவை. தீர்மானம் ஒன்றை ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் விதி “வல்லரசு ஒற்றுமை’ என்று அழைக்கப்படுகிறது.
 • இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அத்தீர்மானம் நிறைவேறாது. அம்முறை தடுப்பாணை (Veto) அதிகாரம் எனப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதுகாப்புச்சபையின் முடிவுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

பொருளாதார மற்றும் சமூக கழகம்

 • ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த 14 ஏஜென்சி களின் அலுவல்களை இது ஒருங்கிணைக்கிறது. மேலும் பத்து பணிசார்ந்த கழகங்கள் மற்றும் ஐந்து பிரதேச கழகங்கள் மற்றும் பதினொன்று ஐக்கிய நாடுகள் கழக நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் கொள்கைகள் ஆகியவைகளை இக்கழகம் பரிசீலிலித்து ஐக்கிய நாடுகள் கழகத்திற்கு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க பரிந் துரைக்கிறது. இக்கழகம் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் உயர் நிலையை எட்டுவதற்கு உறுப்பு நாடுகளுக்கு உதவுகிறது. இந்த பணிக்காக கிட்டத்தட்ட 2100-க்கும் அதிகமான கல்வியாளர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் இதர அமைப்புக்களை இது கலந்து ஆலோசிக்கிறது. இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு இதன் தலைவராக எச்.ஈ. கேர் ரோசந்தால் என்பவர் இருக்கிறார். இக்கழகம் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதற்கு தேவையாக உள்ள ஆலோசனைகளை வழங்குகிறது.

தர்மகர்த்தா கழகம்

 • 1994-ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் இக்கழகம் செயல்படவில்லை. கடைசியாக இருந்த தர்மகர்த்தா நாடான பலோ 1994-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி சுதந்திரம் பெற்றது. இக்கழகம் செய்ய வேண்டிய கடமை அத்துடன் முடிந்துப் போனது.
 • இக்கழகம் சுதந்திரம் பெறாமல் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் பின்னால் சுமார் 100 நாடுகள் சுதந்திரம் பெற வேண்டியவைகளாக இருந்தன. இவற்றில் பல அவைகளாகவே விடுதலைப் பெற்றுவிட்டன.
 • விடுதலைப் பெறாமல் இருந்த இதர நாடுகளுக்கு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிலிருந்து விடுதலைப் பெற்றுத் தரும் பணியை இது மேற்கொண்டிருந்தது. இப்பணியை சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அவற்றின் மேல் நடவடிக்கை எடுத்து விடுதலைப்பெற்றுத் தரும் பணியை இது செய்தது.

உலக நீதிமன்றம்

 • ஐக்கிய நாடுகள் கழகத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாகும். நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் தி.ஹேக் என்ற நகரில் “அமைதி அரண்மனை’ என்ற கட்டிடத்தில் துவக்கப்பட்டு 1946-ஆம் ஆண்டு பணியாற்றத் தொடங்கியது. இது உலக நாடுகள் கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட உலக நீதிமன்றத்தின் மறுபதிப்பாகும்.

இந்நீதிமன்றத்தின் பணிகள்

 • இந்த நீதிமன்றம் இரு வகையான பணிகளைச் செய்கிறது. முதலாவது ஐக்கிய நாடுகள் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கிடையே ஏற்படும் சட்டம் மற்றும் நியாய அடிப்படையில் ஏற்படும் தாவாக்களில் பன்னாட்டுச் சட்ட அடிப்படையில் அவைகளைத் தீர்த்து வைக்கிறது.
 • இரண்டாவதாக ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கிடையே சட்ட சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்போது அவைகள் பற்றி ஆலோசனை வழங்குகிறது.

நீதிமன்றத்தின் அமைப்பு

 • இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்களின் பதவிக்காலம் 9 ஆண்டுகள் ஆகும்.
 • மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பதவிக்காலம் முடிந்தாலும் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் இந்த நீதிபதிகள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
 • அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த நாட்டில், உயர் நிலையில் உள்ள நீதி மன்றத்தில் நியமிக்கப்படுவதற்கு என்னத் தகுதிகள் வேண்டுமோ அந்தத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் அவர்கள் சேர்ந்த நாட்டினுடைய பிரதிநிதி களாகக் கருதப்படமாட்டார்கள்.
 • இந் நீதிமன்றம் உலகத்தில் நடைமுறையில் இருந்து வரும் பண்பாடு, மற்றும் நீதி வழங்கும் முறைகளை பிரதிபலிலிப்பதாக செயல்பட வேண்டும். இந்த நீதிபதிகள் ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இதனை பாதுகாப்புச் சபையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் கழக செயலகம்

 • ஐக்கிய நாடுகள் கழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தில் கொள்கைகயையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பணிகளை செய்கிறார்கள்.
 • இவர்களுக்கெல்லாம் தலைவராக பொதுப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாப்புக் சபையால் நியமிக்கப் படுகின்ற பொதுச்செயலாளர் தலைமை வகிக்கிறார். இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவர் மீண்டும் இந்த பதவிக்கு நியமிக்கப்படலாம்.
 • செயலகத்தில் பணிகள் பலதரப்பட்டவை இவற்றில் முக்கியமானவை உலக அமைதிக்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவது அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவு களில் சமரசம் செய்வது சமூக பொருளாதார துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப் படையில் தேவையான திட்டங்களை வகுத்து செயல் படுத்துதல், மற்றும் மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்தல் போன்றவையாகும்.
 • இச்செயலகம் ஐக்கிய நாடுகள் கழகம் என்னென்னப் பணிகளையும் கடமைகளையும் செய்து வருகிறது என்பதை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக அவ்வப்போது உலக நாடுகளுக்குத் தெரிவிப்பது. உலகப் பிரச்சனைகள் பற்றி மாநாடுகள் நடத்துவது, மற்றும் ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளுக்கு மொழி பெயர்ப்புகளை இதர மொழிகளில் வெளியிடுவது ஆகிய பல பணிகளைச் செய்து வருகிறது.
 • ஐக்கிய நாடுகள் கழகத்தின் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் இயங்குகிறது. இதனுடைய கிளைகள் பல நாடுகளில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை அடிஸ் அபாபா, பாங்காக், பெய்ரூட், ஜெனீவா, நைரோபி, சாண்டியாகோ மற்றும் வியன்னா நகரங்களில் செயல்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் கழகத்தின் இதர பிரதிநிதித்துவ அமைப்புகள்

ஐக்கிய நாடுகள் கழகத்தின் முக்கிய  அமைப்புகள்

 • ஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO)-க் கழகம்.
 • சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA), வியன்னா, ஆஸ்திரியா
 • சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மனிடிரியல் – கனடா,
 • சர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC) நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
 • பன்னாட்டு நீதிமன்றம் (ICJ) திஹேக், நெதர்லாந்து.
 • பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா, (உலகவங்கி குழு)
 • பன்னாட்டு நிதி- வேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) – ரோம், இத்தாலிலி.
 • உலக தொழிலாளர்கள் அமைப்பு (ILO)ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • பன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO) லண்டன், இங்கிலாந்து.
 • உலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா.
 • சர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (INSTRAW) சாந்தே டோமின்கே.
 • பன்னாட்டு தொலை தொடர்பு மையம் (ITO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • உலக வர்த்தகமையம் (ITC) – ஜெனீவா, சுவிட்சர்லாந்து (UNCTAD / WTO) (University of Peace)
 • ஐக்கிய நாடுகளின் கூட்டு செயல் திட்டம் – HIV / AIDS (UNAIDS) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • செய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.
 • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
 • ஐக்கிய நாடுகளின் வார்த்தக முன்னேற்ற மாநாடு (UNCTAO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • ஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control) திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.
 • ஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி. (UNIFEM) – நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
 • ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
 • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பாரீஸ், பிரான்ஸ்
 • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி – கென்யா
 • ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற அமைப்பு  (UNIDO)  வியன்னா, ஆஸ்திரியா
 • ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி- (UNFPA) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
 • ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU) டோக்கியோ, ஜப்பான்.
 • ஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி
 • பன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து
 • பெண்கள் காப்பகம்- நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு
 • உலகவங்கி குழுமம் – வாஷிங்டன், அமெரிக்கா ஐக்கிய நாடு
 • உலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலிலி
 • உலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
 • உலக அறிவுசார் பொருள் கழகம் (WIPO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து
 • உலக வானிலை அமைப்பு (WMO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து
 • உலக சுற்றுலா அமைப்பு- மேட்ரிட்- ஸ்பெயின்
 • உலக வர்த்தக மையம்- (WTO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து