Education News

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Online Counselling For Arts And Science Studies

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

  • சென்னை: பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு நடப்பது போல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
  • துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறையின் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி இனி கலை அறிவியல் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட ஆன்லைன் கலந்தாய்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker