Education News

கலை-அறிவியல் படிப்புகளுக்கு 2020-21 முதல் ஆன்-லைன் கலந்தாய்வு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கலை-அறிவியல் படிப்புகளுக்கு 2020-21 முதல் ஆன்-லைன் கலந்தாய்வு

  • பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படுவதைப் போன்று மாநிலம் முழுவதும் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் கலந்தாய்வு முறையை 2020-21 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற உயர் கல்வித் துறை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ. இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் நடத்தப்பட்டு வந்தது.
    பின்னர் இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்-லைன் முறையில் மாற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொறியியல் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
  • ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு கல்லூரியும் தனியார் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
    இந்த தனித்தனி சேர்க்கை நடைமுறை காரணமாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருவதோடு, தனியார் கல்லூரிகளில் கூடுதல் விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
  • இந்த முறைகேடுகளைத் தடுக்க பொறியியல் சேர்க்கைக்கு உள்ளதுபோல, கலை-அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கைகளை ஏற்று, விரைவில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
  • இந்த நிலையில், வருகிற 2020-21 கல்வியாண்டு முதல், மாநிலம் முழுவதும் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்-லைன் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker