ஒலிம்பிக் பதக்க வரலாறு

rio olympic medals 318_0

 

  • கடந்த 2004, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து, கிரேக்க புராணங்களில் வரும் ‘நைக்'(பெண் கடவுளின்) உருவம் பதக்கத்தின் முகப்பு பகுதியில் இருக்கும்.

 

  • இந்த வரிசையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கத்தின் முன் பகுதியில் இறக்கைகளுடன் கூடிய பெண் போன்ற அமைப்பு உள்ளது. இது பழமையான கிரேக்க கடவுளை குறிப்பது போல தெரிந்தாலும், உண்மையில் பிரேசில் பெண்களை போல வடிமைக்கப்பட்டுள்ளதாம்.

 

  • ஒலிம்பிக்கை நடத்தும் நாட்டின் விருப்பத்திற்கேற்ப பதக்க வடிவில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்பதால், போட்டி நடக்கும் ரியோ டி ஜெனிரோ நகரத்தின் வளைந்து, நெளிந்த பாதைகள், கடல், மலைப் பகுதிகளை குறித்கும் வகையில் இதை தயார் செய்தனர்.

 

  • ரியோ டி ஜெனிரோ நகரின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா குரூசில் உள்ள நாணய தொழிற்சாலையில் 2800 பேர் சேர்ந்து, நெல்சன் கார்னெய்ரோ, 60 என்பவர் தலைமையில், பதக்கங்கள் வடிவமைக்கப்பட்டன.

 

எடை எவ்வளவு:

 

  • ஒலிம்பிக் போட்டிகளின் போது 2,488 பதக்கங்கள் வழங்கப்படும். இதில் 812 தங்கம், 812 வெள்ளி, 864 வெண்கலம் அடங்கும். பதக்கத்தின் எடை 500 கிராம். லண்டன் (2012) ஒலிம்பிக்கில் தரப்பட்டத்தை விட 20 சதவீத எடை அதிகம். தவிர, இதுவரை வழங்கிய ஒலிம்பிக் பதக்கங்களின் எடையை விடவும் இது அதிகம்.

 

6 கிராம் தங்கம்:

 

  • 500 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், உண்மையில் 494 கிராம் வெள்ளியால் ஆனது. இதன் மீது 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும்.
No Comments

Sorry, the comment form is closed at this time.