ஒலிம்பிக் வரலாறு

Best-Olympic-Rings-Wallpaper-Download2

 

 

 • இதமாகவும் ஒலிப்பிழம்பாகவும் பகல் பொழுதில் விண்ணில் மின்னும் சூரியனைவிட நட்சத்திரம் ஏதுமில்லை. அதுபோல இவ்வுலகில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான போட்டி என்று ஏதுமில்லை,

 

 • 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவிதை படைத்த கிரேக்க கவிஞர் பின்டார் ஒலிம்பிக் போட்டிகளின் பெருமையை இவ்வாறு கூறியுள்ளார்.

 

 • இந்த கவிஞர் கூறியதைவிட ஒலிம்பிக் போட்டிகளின் தொன்மை பெருமையை வேறு எவராலும் கூற முடியாது.

 

 • இன்று நேற்றல்ல, 27 நூற்றாண்டுகளுக்கு முன்னர் துவங்கியது ஒலிம்பிக் போட்டிகள் என்றால் நம்ப முடிகின்றதா?

 

 • ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஒரு நாள் போட்டியாக ஒலிம்பிக் போட்டி துவங்கியது.

 

 • கிரேக்கர்களின் கடவுளாகக் கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவக்கப்பட்டது.

 

 • அந்த காலத்தில் போர்க்கலையாகவும், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கேளிக்கையாகவும் இருந்த சிலவற்றை தொகுத்து விளையாட்டுப் போட்டிகளாய் மாற்றி முதல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டதாக பழைய வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

 

 • ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க கிரேக்க உலகத்தின் ஒவ்வொரு நகரில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமியிருந்தனர். போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டு அந்த கிரீடத்துடன் பெருமையாக தங்கள் நகர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களையே “ஹீரோ” என்று அழைத்துள்ளனர்.

 

 • ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணமான பெண்கள், போட்டியில் பங்கேற்கவோ, பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பணிப்பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த டிமட்டர் ஆலயத்தின் தலைமை பெண் பூசாரி 2வது உயர்ந்த இருக்கையில் அமர்த்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்களுடைய திறனை வெளிப்படுத்த ஹேரேயா போட்டிகள் என்று தனியாக நடத்தப்பட்டது. கிரேக்க கடவுளான ஜீயசின் மனைவி ஹேரா பெயரால் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

 

 • அன்றைய ஒலிம்பிக்கில் மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், எடை மிகுந்த கல்லை எறிதல் ஆகியவற்றுடன் இன்று வரை பிரபலமாக இருக்கும் மராத்தன் போட்டி என்றழைக்கப்படும் நீண்ட தூர ஓட்டப்பந்தயம் நடந்துள்ளன.

 

 • முதலில் ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்ட போட்டியாக இருந்த ஒலிம்பிக்ஸ், பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல நாள் போட்டியாக நடத்தப்பட்டுள்ளது. காலத்தின் போக்கின் ஒரு அடையாளமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை இப்போட்டிகள் நடத்தப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.
No Comments

Sorry, the comment form is closed at this time.