அணுக்கரு பிளவு & அணுக்கரு இணைவு | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 • அணுக்கரு பிளவைக் கண்டுபிடித்தவர் (அல்லது) அணுக்குண்டு தத்துவத்தை கண்டுபிடித்தவர் ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மான்.
 • அணுக்கரு பிளவு என்பது கனமான தனிமம் யுரேனியத்தை நியூட்ரான் கொண்டு தாக்கும் பொழுது அது பேரியம், கிரிப்டான் என்ற இரண்டு சமமான துண்டுகளாக வெடித்து வெளிவரும். அப்போது பேரளவு ஆற்றல் வெளிப்படும்.

92U235  + On1———-56 Ba 141 + 36 Kr92  + 3No+ Q

 • யுரேனிய ஒரு அணுக்கருப் பிளவின்போது 200MeV  (MeV-  மில்லியன் எலக்டரான் வோல்ட்) ஆற்றல் வெளிப்படுகிறது.
 • 1 கிராம் யுரேனியம் அணுக்கரு பிளவிற்கு உட்படும்போது வெளிப்படும் ஆற்றல் 128 x 1023  MeV அணுக்கரு பிளவு இரண்டு வகைப்படும்.
 • கட்டுப்பாட்டுடன் கூடிய அணுக்கருப் பிளவு தொடர்வினை (அணுக்கரு உலை).
 • கட்டுப்பாடற்ற அணுக்கருப் பிளவு தொடர்வினை (அணுக்குண்டு தத்துவம்).

அணுக்கரு உலை:

 • கட்டுப்பாட்டுடன் கூடிய அணுக்கருப் பிளவு தொடர்வினை நிகழும் அமைப்பு.

அணுக்கரு உலையின் முக்கியமான பகுதிகள்:

 • எரிபொருள்; U235, p239 ஆகிய அணுக்கருப் உலையில் பயன்படும் பிளவுறம் பொருள்கள் ஆகும். இயற்கையில் யுரேனியம்  U238 – 99.28 % யும்  U235 , – 0.72% யும் கிடைக்கிறதுஅதாவது U235 , மிகக்குறைந்த அளவிலேயே கிடைக்கிறதுஇந்த பிளவுறும் யுரேனியம் U235  செறிவூட்டப்பட்ட யுரேனியம் எனப்படும்.

தணிப்பான்:

 • அணுக்கரு பிளவு ஏற்படும்போது உற்பத்தி செய்யப்படும் நியூட்ரானின் வேகத்தை குறைக்கப் பயன்படும் பொருள் தணிப்பான்கள் என்படும். (எகா) கிராபைட், பெரிலியம், கனநீர் (D2O)

கட்டுப்படுத்தும் கழிகள்:

 • தொடர்வினை நிகழ்வதை கட்டுப்படுத்த அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கழிகள் நியூட்ரான்களை உட்கவரும் பொருள்களால் ஆனவை.

(.கா) காட்மியம், போரான்.

குளிர்விப்பான்:

தொடர்வினையின்போது ஏற்படும் வெப்பத்தை உட்கவரப் பயன்படும் பொருள் குளிர்விப்பான் ஆகும்.

(.கா) சாதாரண நீர், கனநீர், திரவ சோடியம்

கன நீர் தணிப்பானாகவும், குளிர்விப்பானகவும் செயல்படுகிறது.

தடுப்பு உறைகள்:

அணுக்கரு பிளவின்போது வெளிப்படும் கதிர்வீச்சு உயிரினத்திற்கு மிகவும் அபாயகரமானதும் தீங்கு விளைவிக்கக்கூடியதும் ஆகும்எனவே, இவற்றிலிருந்து பாதுகாக்க காரீய சுவர்களும் காரீய ஆடைகளும் பயன்படுத்தப்படுகிறது.

அணுக்கரு இணைவு:

 • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் கனமான நிலையான அணுக்கரு உருவாகி அதிக அளவு ஆற்றலை வெளியிடும் நிகழ்வு  அணுக்கரு இணைவு எனப்படும்.

(.கா) 1. 1H2 + 1H2 – 2He2 + Q (டியூட்ரியம்)

 • இவை அணுக்கரு பிளவு ஆற்றலைவிட அதிக ஆற்றலை வெளியிடுகிறது.
 • இவை சூரியன், விண்மீன்களில் ஏற்படும் ஆற்றலுக்கு அணுக்கரு இணைவே காரணம்.
 • ஆனால் அணுக்கரு இணைவு நிகழ்விற்கு உயர் வெப்பநிலை தேவைப்பவதால் இவை வெப்ப அணுக்கரு வினைகள் எனப்படும்.
 • அணுக்கரு இணைவு வினையைக் கண்டுபிடித்தவர் பெத்தே.
 • ஹைட்ரஜன் குண்டையை கண்டுபிடித்தவர் எட்வர்டு டெல்லர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]