Nootradu Kalam TNPSC | TET Study Materials | நூற்றாண்டு காலங்கள்
Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலம்

  • இக்காலத்தினை ஐரோப்பியர் காலம் என்று குறிப்பிடலாம்.
  • இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள் தோன்றினர்.
  • இக்காலத்தில் பல புத்திலக்கியங்கள் தோன்றி தமிழுக்கு வளம் சேர்த்தன.
  • பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டு வெளிவந்தது.
  • வ.வே.சு ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையை எழுதி தமிழ்ச்சிறுகதை இலக்கியத்தினை தொடங்கி வைத்தார்.
  • புதுக்கவிதை இலக்கியம் தோன்றியது. கட்டுரை இலக்கியம் வளர்ச்சியடைந்தது.

இருபதாம் நூற்றாண்டு

  • ஆங்கிலேயருக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நாட்டில் நடைபெற்றன.
  • பாரதி உள்ளிட்ட பெருங்கவிஞர்கள் தோன்றி கவிதை இலக்கியத்தை வளம்பெறச் செய்தனர்.
  • கல்கி, உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் தோன்றி நாவல் இலக்கியத்தை வளப்படுத்தினர்.
  • புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலர் தோன்றி சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர்.
  • திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் நல்ல கட்டுரை இலக்கியங்களைப் படைத்து தமிழன்னைக்கு அணி செய்தனர்.
  • தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்டோரின் உழைப்பால் தமிழ் நாடகத்துறை வளமுற்றது. கடிதம், மொழி வரலாறு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி உள்ளிட்ட இலக்கியத்துறைகள் தோன்றி தமிழை உலகளாவிய நிலைக்கு உயர்த்தியது.

 

Click Here To Get More Details