நூலாசிரியர்

tamil-grammar

  • சென்னைக்கு அருகிலுள்ளகுன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர்.
  • இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும்.
  • சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும்.
  • இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார்.
  • அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார்.
  • இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன்என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான்.
  • இவருடைய காலம் கி.பி. 12 –ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
  • சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத்தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
  • கல்வெட்டுகள் இவரைமாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.