நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

 

 

Image result for group of nobel prize indian

 

ரவீந்திரநாத் தாகூர்

 

 

Rabindranath_Tagore

 

 

 • இந்தியா வின் பிரபல எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கிய குருதேவ் என பிரபல்யமாக அறியப்படுகின்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலி என்ற தனது கவிதைத் தொகுப்புக்காக 1913ம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் தாகூர் அவர்களே நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

 

 • இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளின் தேசிய கீதத்தினை இயற்றிய பெருமைக்குரியவரும் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

 

 

சந்திரசேகர வெங்கட் ராமன்

 

images

 

 

 • தமிழ் நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன்,கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.சேர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு” என அழைக்கப்படுகின்றது.

 

 • நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சேர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.

 

 

ஹர்கோவிந்த் கொரானா

 

as

 

 

 • டாக்டர் ஹர்கோவிந்த் பஞ்சாப், ராய்ப்பூரில் (தற்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். இரசாயனவியல் கலாநிதிப் படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹர்கோவிந்த் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.

 

 • 1968ம் ஆண்டு மருத்துவவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். மனித நிறமூர்த்த குறியீடுகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் ஹர்கோவிந்த் நோபல் பரிசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

அன்னை தெரசா

 

MTE1ODA0OTcxODAxNTQ0MjA1

 

 • அல்பேனி யாவை பிறப்பிடமாகக் கொண்ட அன்னை திரேசா கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக 1929ம் ஆண்டு இந்தியாவை வந்தடைந்து தனது முதல் ஆசிரியப் பணியை கல்கத்தாவில் ஆரம்பித்தார். அவரது 20வருட கல்கத்தா ஆசிரியப் பணி அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. இந்தியாவின் வறுமைக்குள் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948ல் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொண்ட அன்னை,இந்தியா முழுவதும் திருச்சபையிலான் தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து தொண்டாற்றினார். அன்னையின் சேவையினை உணர்ந்த நோபல் குழு 1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினை வழங்கியது. முதலில் அதை மறுத்த அன்னை ஏழைகளில் ஏழைகளுக்காக அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார்.

 

 

சுப்பிரமணியன் சந்திரசேகர்

183px-ChandraNobel

 

 

 • மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்ற டாக்டர் சந்திரசேகர் பின்னர் தனது வேலைகளுக்காக அமெரிக்கா சென்றதுடன் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

 

 • டாக்டர் சந்திரசேகர் 1983 ம் ஆண்டு வானவியல் தொடர்பான தன்னுடைய ஆய்வுக்காக பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வானவியல் தொடர்பான ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.

 

 • டாக்டர் சந்திரசேகர் , சேர் C.V. ராமனுடைய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

அமெர்த்தியா சென்

am

 

 

 • பேராசிரியர் அமெர்த்தியா சென் பொருளாதார நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். பேராசிரியர் அமெர்த்தியா சென் சிறந்த விரிவுரையாளருமாவார். பொருளாதாரக் கொள்கைகள்-வறுமை, ஜனநாயகம்,அபிவிருத்தி,சமூக நலன் தொடர்பான பகுதியில் சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் அமெர்த்தியா சென் 1998ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்

 

7

 

 

 • 1952 ம் ஆண்டு தமிழகத்திலுள்ள பிறந்த இவர் அமெரிக்காவின் ஒகியோ பல்கலைக்கழகத்தில் 1976ம் ஆண்டு பெளதிகவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1982ல் அமெரிக்க குடியுரிமையப் பெற்றுக் கொண்ட இவர் கேம்பிரிட்ஜிலுள்ள எம்.ஆர்.சி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக கடமையாற்றுகின்றார்.

 

 • மரபணுக் குறியீடுகளில் றைபோசோம்களின் பங்கு குறித்த இவரின் ஆராய்ச்சிக்காக 2009 ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார்.

 

 • நோபல் பரிசினை பெறும் 3 வது தமிழர் டாக்டர் இராமகிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.