நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்:

 • உலகில் மிக அதிக அளவில் கிடைக்கும் வாயு நிலைத் தனிமம் நைட்ரஜன்.
 • நைட்ரஜன் உயிரினங்களின் வளர்ச்சிக்கு தேவையான புரதங்களின் முக்கியத் தனிமமாகும்.
 • நவீன தனிம வரிசை அவணையில் 5ஆம் தொகுதியில் முதல் தனிமமாக நைட்ரஜன் உள்ளது.
 • காற்றின் நைட்ரன் 80%
 • காற்றிலுள்ள நைட்ரஜனை உயிரினங்கள் நேரடியாகப் பெற இயலாது. எனவே, வளிமண்டல நைட்ரஜனை நீரில் கரையக் கூடிய சேர்மங்களாக மாற்றி நிலத்தில் நிலை நிறுத்தினால் பயிரினங்கள் தம் தேவைக்கேற்ப நிலத்திலிருந்து நைட்ரஜனைப் பெற முடியும்.
 • பயிர்களிலிருந்து மற்ற உயிரினங்கள் ஹைட்ரஜனை – எடுத்துக் கொள்ளும் இச்செயல் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துதல் எனப்படும்.
 • வளிமண்டலத்தில் ஏற்படும் மின்னல்களால் காற்றிலுள்ள நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் கூடி நைட்ரஜன் ஆக்ஸைடு ll தோன்றுகிறது.
 • விலங்குகளும் பயிர்களும் மக்கும்போது நைட்ரஜன் பிரிந்து காற்றோடு கலக்கிறது. இதனால் வளிமண்டல நைட்ரஜன் மாறாதிருக்கிறது.  இம்முறையில் வளிமண்டலத்திலிருந்து உயிரினங்களுக்கும் உயிரினங்களிலிருந்து வளிமண்டலத்திற்கும் நைட்ரஜன் செல்லுதல் நைட்ரஜன் சுழற்சி எனப்படும்.
 • சில வெக்கியூம் தாவரங்களின் வேர் முண்டுகளில் உள்ள பாக்டிரியாக்கள் நைட்ரஜனை நேரடியாக வளிமண்டலத்திலிருந்து எடுத்த நைட்ரேட் உப்பாக மாற்றுகின்றன.

எ.கா. பட்டாணி, நிலக்கடலை

 

நைட்ரஜன் l ஆக்ஸைடு:

 • நிறமற்ற இனிய மணம் கொண்ட வாயு.
 • இவை சுவாசிக்கும் போது நரம்புகள் கிளர்ச்சியுற்று சிரிப்பு உண்டாக்கும். எனவே இது சிரிப்பூட்டும் வாயு எனப்படுகிறது.
 • குளிர்ந்த நீரில் இவ்வாயு குறிப்பிட்ட அளவு கரையும். இக்கரைசல் நடுநிலை தன்மை கொண்டது.
 • இது எரியக்கூடிய வாயு அல்ல. ஆனால் எரிதலுக்குத் துணை செய்யும்.
 • எரியும் சந்தகம், வெண்பாஸ்பரஸ், கார்பன், சோடியம், மெக்னீசியம் போன்றவை இவ்வாயுவில் தொடர்ந்து எரியும்.
 • இது ஆக்ஸிஜனுடன் கலக்கப்பட்டு அறுவை சிகிச்சையில் மருந்தாகப் பயன்பட்டது. முற்காலத்தில் பல்பிடுங்கவும் பயன்பட்டது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]