நிறுத்தக்குறிகள் | nirthakkirikal

tamil-grammar

  • படித்தல்திறன் முழுமையடைய படிக்கும்போது பொருளுணர்வுக்கேற்ப நிறுத்தவேண்டிய இடங்களில் நிறுத்தியும், உணர்வுகள் வெளிப்பட வேண்டிய இடங்களில் அவற்றை வெளிப்படுத்தியும் படிக்கவேண்டும்.
  • இதற்குத் துணைபுரிவன குறிகளே. இக்குறிகளைப் பயன்படுத்திப் படிக்கும்போது, தெளிவாகப் பொருளுணர்ந்து, படிப்பவர்களும் கேட்பவர்களும் பயன்பெறுகின்றனர்.
  1. காற்புள்ளி (,)

பொருள்களை எண்ணுமிடங்களிலும், விளிமுன்னும் வினையெச்சங்கட்குப்பின்னும், மேற்கோட்குறிகளுக்கு முன்னும், ஆதலால், அகவே முதலிய சொற்களுக்குப் பின்னும் காற்புள்ளி இடவேண்டும்.

  1. அரைப்புள்ளி (;)

ஓரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும். ஒரே   எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து    வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி இடவேண்டும்

  1. முக்காற்புள்ளி (:)

உள் தலைப்பு அமைக்கும்போது, ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும்     முக்காற்புள்ளி இடவேண்டும்.

  1. முற்றுப்புள்ளி

வாக்கிய முடிவிலும் முகவரிஇறுதியிலும் சொற்சுருக்கத்திலும் முற்றுப்புள்ளி     இடவேண்டும்.

  1. வினாக்குறி (?)

வினாப் பொருளைத்தரும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி     இடல்வேண்டும்.

  1. வியாப்புக்குறி (!)

வியப்பு, அவலம் முதலான உணர்ச்சிகளைக் காட்டுகின்ற வாக்கியங்களுக்குப்    பின்னும், வரவேற்றல், வாழ்த்தல், வைதல் ஆகிய பொருள்களைத்     தெரிவிக்கின்ற வாக்கியங்களுக்குப் பின்னும் வியப்புக் குறி இடவேண்டும்.

  1. ஒற்றை மேற்கோள் குறி (‘)

ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இடங்களிலும், சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக்     காட்டுகின்ற இடங்களிலும் ஒற்றை மேற்கோள் குறி. இடவேண்டும்.

  1. இரட்டை மேற்கோள் குறி (“”)

தன்கூற்றை வலியுறுத்த, தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர்கூற்றைக் கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் குறி இடவேண்டும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.