New Insurance Programs

புதிய காப்பீட்டு திட்டங்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for New Insurance Programs

  • பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

 

  •  இதன் முதல் படியாக ஏழைகளும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் அமல்படுத்தபட்டது. இதில் கோடிக்கணக்காக மக்கள் சேர்ந்தனர்.

 

  •  இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வங்கிகள் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது.

 

  •  இவை தவிர, மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் அனைவருக்கும் பென்ஷன் வழங்கும் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.

 

  •  வங்கி கணக்கு வைத்திருப்போர் விபத்து, ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய நிதித்துறை ஆலோசனை நடத்தியது.

 

  •  மத்திய பட்ஜெட் 2015-16-இல் புதிய காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருந்தார்.

 

  •  திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த மாதம் 9-ஆம் தேதி மேற்குவங்காள மாநிலத்தில் துவக்கிவைக்கப்பட்டது.

 

  •  பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jothi Bima Yojana – PMJJBY),  அடல் பென்சன் யோஜனா (Atal Pension Yojana)  பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana – PMSBY) பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.

 

  •  இது ஒரு விபத்து காப்பீடு திட்டமாகும். இக்காப்பீடு திட்டம் விபத்து போன்ற காரணங்களால் நிகழும் துரதிருஷ்ட மற்றும் அகால மரணத்தின் போது குடும்ப பாதுகாப்பிற்காக அறிமுகமாகிறது.

 

  •  ஓராண்டு இடைவெளியில் புதுப்பிக்கத்தக்க வகையிலான இந்த காப்பீடு திட்டம் ரூபாய் 2 இலட்சம் மதிப்புடையதாகும்.

 

  •  வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-70 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய் 12 மட்டுமே பிரிமியம் செலுத்தி  இக்காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். ஆண்டுதோறும் ரூ 12. பிரிமியம் செலுத்தி வந்தால் ரூபாய் 2 இலட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் செயல் இழப்பும் இதில் அடங்கும்.

 

  •  வங்கியின் விருப்பத்தை பொறுத்து எல்ஐசி மூலமாகவோ அல்லது மற்ற காப்பீடு நிறுவனங்களின் வழியாகவோ இந்த திட்டம் வழங்கப்படும்.

 

பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

 

  •  பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூபாய் 2 இலட்சம் மதிப்புடைய காப்பீடுத்  திட்டமாகும்.

 

  •  வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-50 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய்  330 -ஐ மட்டும் பிரிமியம் செலுத்தி இக்காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

 

  •  இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஒய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

 

  •  வங்கியின் விருப்பத்தை பொறுத்து எல்ஐசி மூலமாகவோ அல்லது மற்ற காப்பீடு நிறுவனங்களின் வழியாகவோ இந்த திட்டம் வழக்கப்படும்.

 

அடல் பென்சன் யோஜனா

  •  18-40 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அடல் பென்சன் யோஜனா திட்டதில் சேரலாம்.

 

  •  குறைந்தபட்ச வைப்பு பென்சன் தொகை மத்திய அரசால் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

 

  •  ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ. 1000 முதல் 5000 வரை பென்சன் பெறலாம்.

 

  •  வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் சுரக்ஷா பீமா யோஜனா, ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா ஆகிய மூன்று திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்
LATESTS GOVERNMENT JOBS