ரூதர்ஃபோர் & நீல்போரின் அணு அமைப்புக் கொள்கைகள்

Deal Score0

ரூதர்ஃபோர் &  நீல்போரின் அணு அமைப்புக் கொள்கைகள்

 

ரூதர்ஃபோர்டின்  அணு உட்கரு அமைப்பு

  • ஓர் அணு இரு பகுதிகளைப் பெற்றுள்ளது. ஒன்று உட்கரு, மற்றொன்று உட்கருவைச் சூழ்ந்துள்ள வெளிப்பகுதி.
  • அணுவின் உட்கருவில் அணுவின் பெரும்பகுதி நிறையும், அனைத்து நேர்மின் சுமையும் செறிந்துள்ளது.
  • உட்கரு புரோட்டான்களைப் பெற்றுள்ளது. (அப்போது நியூட்ரான் கண்டுபிடிக்கவில்லை).
  • வெவ்வேறு தனிமங்களின் அணுக்களின் உட்கருவில் உள்ள மின்சுமையின் அளவு மாறுபடும்.
  • உட்கருவைச் சுற்றி அதிக வேகமாக எலக்ட்ரான்கள் சுழன்று வருகின்றன. எலக்ட்ரான்களுக்கும், உட்கருவிற்கும் இடையேயான கவர்ச்சிவிசை இயங்கிவரும் எலக்ட்ரான்களின் மையவிலக்கு விசையால் ஈடு செய்யப்படுகிறது.
  • ஓர் அணுவின் உட்கருவில் எவ்வளவு நேர்மின்சுமை உள்ளதோ அதற்குச் சமமான எண்ணிக்கையில் எதிர்மின்சுமை பெற்ற எலக்ட்ரான்கள் உள்ளன.
  • எனவே, ஓர் அணு மின்நடுநிலைமை பெற்றுள்ளது.
  • ஓர் அணுவில் பெரும்பான்மையான உட்பகுதி வெற்றிடமாகும்.
  • ஓர் உட்கருவின் பருமனளவு அணுவின் பருமனளவோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது.

ரூதர்  போர்டின் அணு அமைப்பின் குறைகள்:

  • இதில் அணுவின் எலக்ட்ரான் கட்டமைப்பைப் பற்றிக் கூறவில்லை.
  • உட்கருவில் நியூட்ரான்களும் உள்ளன. ஆனால் நியூட்ரான்கள் அப்பொழுது கண்டுபிடிக்கவில்லை.  எனவே, இதனைப் பற்றிய கருத்து அவரால் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
  • ரூதர்போர்டின் அணு அமைப்பு மின்காந்தக் கொள்கை அடிப்பைடையில் தோல்வி கண்டது.
  • ரூதர்போர்டின் கொள்கையினால் அணுவின் நிலைப்புத் தன்மையை விளக்க முடியவில்லை.
Click Here To Get More Details