நீதி இலக்கிய நூல்கள்

tamil-grammar

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளவையே நீதி இலக்கிய நூல்கள் என்று கருதப்படுகிறது

நீதி நூல்கள்

 • பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர்.
 • நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும்.
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளவையே நீதி இலக்கிய நூல்கள் என்று கருதப்படுகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலியவை இத்தொகுப்பில் அடங்கும்.

நீதி இலக்கியங்களின் பட்டியல்

 1. நாலடியார்
 2. நான்மணிக்கடிகை
 3. இன்னா நாற்பது
 4. இனியவை நாற்பது
 5. திருக்குறள்
 6. திரிகடுகம்
 7. ஆசாரக்கோவை
 8. பழமொழி நானூறு
 9. சிறுபஞ்சமூலம்
 10. ஏலாதி
 11. முதுமொழிக்காஞ்சி

நீதி நூல்கள் பெருகியமை

 • தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் ஆட்சி கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது எனலாம்.
 • களப்பிரர்கள் வேற்றுமொழியினர்; வேற்றுச் சமயத்தவர். இவர்கள் காலத்தில் புத்த வழிபாடும், பாலி, பிராகிருத மொழிச்செல்வாக்கும் மிகுந்தன.
 • சங்க காலத்திலேயே பௌத்த, சமணக் கொள்கைகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. ஆனாலும் நாட்டை ஆள்வோரே அவற்றை ஆதரித்து, வலிதில் புகுத்திய காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தொடங்கியது எனலாம். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய இக்களப்பிரர் பௌத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர்.
 • கி.பி.நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டு உறையூரினனாகிய புத்ததத்தன் அபிதம்மாவதாரம், விநயநிச்சயம் என்ற இரு நூல்களைப் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான்.
 • அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர மன்னன் காலத்தில் தான் விநயநிச்சயம் என்ற நூல் எழுதப்பட்டதாக அவனே குறிப்பிட்டுள்ளான். அக்காலத்தில் பௌத்த சமயக் குருமார்கள் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்தனராம். இவை தமிழும் தமிழ் இலக்கியமும் அடைந்த பின்னடைவைச் சுட்டுவன.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.