National Sports Awards 2016 - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

National Sports Awards 2016

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

khel ratna

 

சிந்து, சாக்ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது

 

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 4 பேர், விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

  • ரியோ ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் ஆகியோர் கேல் ரத்னா விருது பெறும் மற்ற இருவர் ஆவர்.

 

  • ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியரான தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராய், ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

 

  • தீபா கர்மாகரின் பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி, விராட் கோலியின் தனிப் பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் சர்மா உள்ளிட்ட 6 பேர் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாசார்யா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

  • கேல் ரத்னா விருதுடன் பட்டயம் மற்றும் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தியான் சந்த் விருதுகளை பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 

  • வரும் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்குகிறார்.

 

Image result for National Sports Awards 2016

கேல் ரத்னா விருது:

  • பி.வி.சிந்து (பாட்மிண்டன்),
  • சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்),
  • தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்),
  • ஜிது ராய் (துப்பாக்கிச் சுடுதல்).

 

துரோணாசார்யா விருது:

  • நாகபுரி ரமேஷ் (தடகளம்),
  • சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை),
  • ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்),
  • விஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்),
  • பிரதீப் குமார் (நீச்சல்),
  • மகாவீர் சிங் (மல்யுத்தம்).

 

அர்ஜுனா விருது:

  • ரஜத் செளகான் (வில்வித்தை),
  • லலிதா பாபர் (தடகளம்),
  • செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்),
  • சிவ தாபா (குத்துச்சண்டை),
  • அஜிங்க்ய ரஹானே (கிரிக்கெட்),
  • சுப்ரதா பால் (கால்பந்து),
  • ராணி ராம்பால் (ஹாக்கி),
  • ரகுநாத் (ஹாக்கி),
  • குருபிரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்),
  • அபூர்வி சண்டீலா (துப்பாக்கிச் சுடுதல்),
  • செளம்யஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்),
  • வினேஷ் போகத் (மல்யுத்தம்),
  • அமித் குமார் (மல்யுத்தம்),
  • சந்தீப் சிங் மான் (பாரா தடகளம்),
  • வீரேந்திர சிங் (மாற்றுத்திறனாளி மல்யுத்தம்).

 

தியான் சந்த் விருது:

  • சேத்தி கீதா (தடகளம்),
  • சில்வனாஸ் டங் டங் (ஹாக்கி),
  • ராஜேந்திர பிரால்ஹத் (படகுப் போட்டி).
LATESTS GOVERNMENT JOBS