தேசிய ஒருமைப்பாடு தினம்”

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for INDIRA GANDHI

நவம்பர் 19 இந்திராகாந்தி பிறந்த தினம்

 • இந்திய நாட்டின் ஒற்றுமையாக தன் இன்னுயிரை இழந்த, இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியின் பிறந்த தேதியை நவம்பர் இந்தத் தினம் இந்தியாவில் ‘தேசிய ஒருமைப்பாடு தினம் (National Integration Day, November 19) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
 • இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. மேலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வாழ்க்கை வரலாறு

 • இந்திரா காந்தி, 1917 நவம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர்..
 • அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள்.
 • 1966, ஜனவரி 19 ஆம் தேதி, பிரதமராக மந்திரியாகப் பதவியேற்ற இந்திரா காந்தி மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 ஆம் ஆண்டு நடந்த பெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 1980, ஜனவரி 14 ஆம் தேதி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 ஆம் ஆண்டு கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

‘சிறந்த அரசியல் திட்டமிட்டாளர் ”

 • இந்திரா காந்தி ஒரு சிறந்த அரசியல் திட்டமிட்டாளர் மற்றும் சிந்தனையாளர். ஆணாதிக்க மனப்பாங்கு கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிக உயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். ஒரு பிரதமராக அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளை மிகச் சரியாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார்.
 • அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, காங்கிரசிலிருந்த மூத்த தலைவர்களை ஓரங்கட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.. இதன் ஓர் அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.
 • 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திராவின் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அந்த நேரத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

எமெர்ஜன்ஸி அறிவிப்பு

 • 1975 ஆண்டு ஆண்டு அவசர நிலையை (எமெர்ஜன்ஸி) அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
 • சுமார் 20 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு குறைத்தது. இருந்தாலும் தன் செல்வாக்கை தப்பாக கணித்த இந்திரா, தேர்தலை நடத்தி தோற்றார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோற்றார்.
 • இந்திரா காங்கிரசுக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். இந்திரா முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக் காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.

சஞ்சய் காந்தி

 • இந்தக் காலத்தில் இந்திராவின் வாரிசாக எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தான் ஓட்டி சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் இறந்தார். மேலும், சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையும் என தலைவர்கள் அஞ்சினார்கள்.
 • இந்திரா காந்தி ராணுவ படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க ராணுவம் பொற்கோயிலுக்குள் செல்ல அனுமதி கொடுத்தார். இதனால், சீக்கியர்களின் கோபத்துக்கு இந்திரா ஆளானார்.

சீக்கியர்கள் ஆத்திரம

 • சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் பயங்கர ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள். இதனால், இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார். ஆனால், அந்த கருத்தை இந்திரா ஏற்கவில்லை.
 • டெல்லியில் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் சாலையில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் சாலையில் இருக்கிறது. ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடி. இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம்.
 • 1984 அக்டோபர் 31 ஆம் தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி தொலைக்காட்சி படம் ஒன்றை எடுக்க, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
 • இரு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் ஆறடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (வயது 33, சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (வயது 26, கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்

துப்பாக்கி சூடு

 • இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் தன் கைத் துப்பாக்கியால், இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதேநேரத்தில் சத்வந்த்சிங் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து ‘முடிந்து‘ விட்டது. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார்.
 • இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால், அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர். இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் இறந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
 • வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா காந்தி, துப்பாக்கிகளின் சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர “ஆபரேஷன்” நடந்தது.

இந்திரா மரணம்

 • இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்” என்று மருத்துவர்கள் அறிவித்தனர். இருந்தாலும் அகில இந்திய வானொலி மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச் செய்தியை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
 • இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. “பிரதமர் வீட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்” என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கொ;ல்கத்தாவுக்குச் சென்றனர்.
 • அங்கு “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்.
 • டெல்லியில்தான் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது
 • இதனால், 1984, அக்டோபர் 31 ஆம் தேதி சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர்கள் இருவராலேயே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமானதாக இருந்தது.
 • 16 ஆண்டு காலம் பிரதமராக இருந்த இந்திரா அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்தது.
 • நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இந்திரா எடுத்த நடவடிக்கை அவரின் உயிரையே பறித்துவிட்டது.