skill india

தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம்

 

Image result for National Skill Development Mission

 

 • தேசிய திறன் மேம்பாட்டு இயக்க (என். எஸ். டி. எம்) நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் ஜூன் 2, 2016, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

 

 • இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், உரிய முறையில் திறன் கண்டறிதலிலின் தேவை குறித்தும், திறன்களுக்கான எதிர்கால தேவைகளை அடையாளம் காண்பதையும் வலிலியுறுத்தியதுடன், இதனால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பணிச்சந்தையில் உருவாக்கும். போக்குகள் குறித்த விழிப்புணர்வைப் பெற முடியும் என்றார். மேலும் அவர், இதே போன்ற பணி திறன்பெற்ற மனித ஆற்றல் தேவைகளை உலகளாவிய அளவில் கண்டறியப்பட வேண்டும் என்றும், இதனால் இந்தியா உலகளாவிய திறன் பணி ஆற்றலிலின் தேவைகளை நிறைவேற்ற நிபூர்த்தி செய்ய முடியும் என்றார்.

 

 • மேலும் பிரதமர் திறன் மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகளாக பாதுகாப்பு விதிகள் மற்றும் மென் திறன்கள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலிலியுறுத்தினார்.

 

 • இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ராஜீவ் பிரதாப் ரூடி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். டாடா குழுமத்தின் தலைவர் பி. சைரஸ் பி மிஸ்த்ரி, ஃபிளிப்கார்ட் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் சச்சின் பன்சால் மற்றும் டீம் லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் மனீஷ் சபர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் நிறுவன முன்னோடிகள் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 • இந்தக் கூட்டத்தில் கீழ்காண்பவை உள்ளிட்ட பல்வேறு பெரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

 • 2016-17 -இல்5 கோடி பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

 

 • இந்தியாவின் திறன் மேம்பாட்டு முறையில் தரத்தை ஏற்படுத்தும் வகையில் 2016 செப்டம்பருக்குள் திறன் சான்றிதழுக்கான மத்திய வாரியம் ஒன்றை அமைப்பது.

 

 • தற்போதுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டமைப்புகளை திறன் பயிற்சி வகுப்பு களுக்காக பயன்படுத்திக் கொள்வது.

 

 • இந்த ஆண்டில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை மொத்த மனித ஆற்றிலில் 10 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த கட்டாயப்படுத்தப்படும். இதனை தனியார் நிறுவனங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 • விருப்பம் உள்ள இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 500 பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு இலவசமாக திறன் பயிற்சி அளிக்கப்படும்.

 

 • நாட்டிற்கு வெளியே சென்று அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் 50 அந்நிய வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மையங்கள் இந்த ஆண்டு திறக்கப்படும்.

 

 • இந்திய தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ), மத்திய பயிற்சி நிறுவனங்கள், பி. எம். கே,. வி. ஒய் பயிற்சி மையங்கள், டூல்ரூம்களில் 500 வேலைவாய்ப்பு விழாக்கள் நடத்தப்பட்டு இளைஞர் களிடையே திறன் பயிற்சி குறித்த ஆர்வம் ஏற்படுத்தப்படும்.

 

 • இந்தியா ஸ்கில்ஸ் என அழைக்கப்படும் தேசிய திறன் போட்டி 2016-17-இல் அறிமுகப்படுத்தி அதன் மூலம் இந்திய இளைஞர்களின் திறன்கள் அங்கீகரிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

 

 • இந்த ஆண்டு ஐ. டி. ஐ பயிற்சி முடித்தவர் களின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு தேசிய அளவிலான பட்டமளிப்பு நடத்தப்படும்.

 

 • அடுத்த ஓராண்டில் ஐ. டி. ஐக்களின் ஏற்புத்திறன்5 லட்சத்தில் இருந்து 25 அதிகமாக விரிவுபடுத்தப்படுவதுடன் மேலும் 5000 புதிய ஐ.டி. ஐக்கள் உருவாக்கப்படும்.

 

 • பல்வேறு நிகழ்ச்சிகளின் கீழ் முறைசாரா பயிற்சிகள் மூலமாக பாரம்பரிய திறன்கள் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.

 

 • இந்திய மக்கள்தொகையில் 65 சதவிகிதத்தினர் 35 வயதுக்குட்பட்ட வர்களாக உள்ளனர். 2025-க்குள் உலகில் பணிபுரியம் வயது தொகையில் (18.3 சதவிகிதம்) ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பார். இந்தியாவின் மக்கள்தொகை பங்களிப்பை பயன்படுத்தவும், திறன்மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான அமைச்சகம் கடந்த நவம்பர் 2014-இல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் திறன் மேம்பாட்டு முயற்சிகள் வழிநடத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த அமைச்சகத்தில் திறன்மிகு இந்தியா பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

 

 • இந்த அமைச்சகம் பிளவுபட்ட சூழலைக்கொண்டுள்ளது. 21 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 50 க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், மோசமான கண்காணிப்பு நுணுக்கங்கள், மாறுபட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் முறைகள் மற்றும் ஒத்திசைவான வெற்றிக் கண்ணோட்டம் இல்லாமை போன்றவை இதன் தீவிரத்தை குறைக்கின்றன.

 

 • தேசிய திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு வாரியம் அல்லது பிரதம மந்திரி தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சில் போன்ற மையப்படுத்தப்பட்ட அமைப்புகளின் மூலமாக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல்வேறு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் இதனைச் செயல் படுத்துவதற்கான கண்ணோட்டம் இன்மை ஆகியவை இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படாமல் போவதற்கு காரணமாயின.

 

 • எம். எஸ். டி. இ அமைச்சகம் இது குறித்தபெரிய ஆய்வுகளை மிகக் குறுகிய காலத்தில் நடத்தியது. ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் திறன் பயிற்சியில் ஈடுபட்ட முக்கிய அமைப்புகள் மற்றும் தொழில்முனைவு சுற்றுச்சூழல் ஆகியவை இந்த அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வெறும் 8 மாதங்களில், எம். எஸ். டி. இ அமைச்சகம் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான ஒரு தேசிய கொள்கையை உருவாக்கி அதில் முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவை இந்தியாவில் ஊக்கப்படுத்தி இந்தியாவின் முதலாவது தேசிய திறன் மேம்பாடு இயக்கத்தை வடிவமைத்து அதன் மூலம் திறன் பயிற்சி முயற்சிகளுக்கு ஒருங்கிணைப்பை அளித்தது. இந்த இரண்டு கொள்கை முயற்சிகளும் பிரதமரால் கடந்த 2015 ஜூலை 15-ஆம் தேதி முறைப்படி அறிமுகப் படுத்தப்பட்டது.

 

 • இந்த இயக்கம் நாடு தழுவிய அளவில் திறன் அளிக்கும் நடவடிக்கைகளை தொடங்குவது, ஒருங்கிணைப்பது, நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களில் தொடர்புடையவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நிர்வாகம், கொள்கை பங்களிப்புக்கான கவுன்சில் ஒருங்கிணைப்புக்கான வழிகாட்டும் குழு மற்றும் திட்ட இயக்குநரகம் (செயற்குழுவின் சேர்த்து) ஆகிய மூன்று அடுக்கு கட்டமைப்பைக் கொண்டது. இந்த திட்டத்திற்கான நிர்வாகக் கவுன்சில் இந்திய பிரதமரை தலைவராகக் கொண்டிருப்பதுடன், திறன் இந்தியா என்ற அவரது கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படுகிறது.

 

 • இந்தியாவின் தொழிற்பயிற்சி முறையில் ஒரு முன்னேற்றத்திற்கான மாற்றத்தை ஸ்கில் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் கடந்த ஓராண்டில்04 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதிவாகியுள்ள தகவல்களை விட இது 36.8 சதவிகிதம் உயர்வாகும்.

 

 • தற்போதைய ஏற்பாட்டில் 60 சதவீத பயிற்சிகள் நேரடியாக எம்.எஸ்.டி.இ-யால்அளிக்கப்படுகிறது, 40 சதவீதம் இதர மத்திய அமைச்சகங்களால் அளிக்கப்படுகிறது. எம். எஸ். டி. இ – யின் முன்னோடி திட்டமான பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் திட்டம் கடந்த 2015 ஜூலை 15 அன்று பிரதமரால்அறிமுகப்படுத்தப்பட்டு, 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளித்து,அவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாவார்கள். இவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறையில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

 • வேகம், அளவு, தரம் மற்றும் நீடித்திருப்பது ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளுடன் என். எஸ். டி. எம் செயல்படுகிறது. இந்த முதல் நிர்வாகக் குழு கூட்டம் இந்த இயக்கத்தின் ஒவ்வொரு முக்கிய கொள்ககளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் நோக்கத்துடனும், உயர் தரத்தை பராமரிக்கும் அதே வேளையில், திறன் பயிற்சி முயற்சிகளை வேகமாக அதிகரிப்பதற்கான செயல்திட்டத்திற்கான செயல்திட்டத்தில் கவனம் குறிப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக நடத்தப் பட்டது.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.