இந்தியாவில் தேசிய மறுமலர்ச்சி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியாவில் தேசிய மறுமலர்ச்சி

National Revival in India 

 • இந்தியாவில் தேசிய மறுமலர்ச்சி
 • இந்தியாவில் தேசிய எழுச்சிக்கான காரணங்கள்
 • கல்வி மற்றும் தகவல் தொடர்பு
 • பத்திரிகைகள்

இந்தியாவில் தேசிய மறுமலர்ச்சி

இந்தியாவில் தேசிய எழுச்சிக்கான காரணங்கள்

 • 18, 19ம் நூற்றாண்டுகளில் தோன்றிய சமூக சமய இயக்கங்கள் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும், தேசிய மறுமலர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
 • ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விமுறை மூலம், உலக வரலாறுகளை இந்தியர்கள் அறிந்து கொள்ளவும் தேசம், ஆட்சி என்ற கருத்துகளை சிந்திக்கவும் வழி வகை செய்தது
 • ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட இந்திய கள ஆய்வுகள், தொல்லியல் ஆய்வுகள், கல்கத்தாவில் தோன்றிய ஆசிய நிறுவனம், சார்லஸ் வில்கின்ஸ் (பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்) வில்லியம் ஜோன்ஸ் (இந்தியவியலின் தந்தை என அறியப்படுபவர்), மாக்ஸ்முல்லர் (வேதங்களையும் சமஸ்கிருத நூல்களையும் ஐரோப்பாவில் பிரபலபடுத்தியவர்) ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்) போன்ற இந்தியவியலாளர்களும் அலெக்சாண்டர் கன்னிங்காம், (இந்திய தொல்லியல் துறையின் தந்தை எனப்படுபவர்) சர் ஜான் மார்ஷல் (சிந்துசமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு செய்தவர்) போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் அரும்பணியால் இந்தியாவின் பண்பாட்டுப் பெருமைகளை இந்தியர்களுக்கு உணர்த்தினர்.
 • ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் மேலைநாடடுக்கல்வி, சுதந்திரம், சமத்துவம் தேசியம் போன்ற கருத்துகளை பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்த்தனர்.
 • பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரம்மஞான சபை, ராமகிருஷ்ண இயக்கம் போன்ற இயக்கங்கள் இந்திய நாட்டின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களிடையே இந்திய தேசியம் வளரக் காரணமாக அமைந்தன
 • இந்திய தேசியம் ஏற்பட ஆங்கிலேயரின் ஆட்சியும் முக்கியமான காரணமாகும். பல்வேறு மன்னர்கள் ஆண்டு வந்த பகுதிகளை, ஆங்கிலேயர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டி இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கினர்
 • இந்தியா முழுவதும் ஆங்கிலேய மைய நிர்வாக முறையின் கீழ்கொண்டுவரப்பட்டது. அகில இந்தியப் பொதுப்புணியும் சட்டத்தொகுப்பும், சட்ட நீர்வாகமும் மக்கள் அனைவரும் ஒருமுறையின் கீழ் வாழ வேண்டும் என்று வலியுறுத்தின
 • ஆங்கில ஆதிக்கத்தின் எதிர்மறைவிளைவே, அந்நியருக்கு அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தி அவர்களது விடுதலை வேட்கையை தூண்டிவிடக் காரணமாக அமைந்தது

 

Click Here to Download