தேசிய சுகாதார இயக்கம்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தேசிய சுகாதார இயக்கம்

 • தேசிய சுகாதார இயக்கம் சுகாதாரத் துறையில் முன்னோடித் திட்டமாக உள்ளது. மாநில அரசுகளின் தேவைக்கு ஏற்ப நிதிகள் வழங்குவதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதாரத் துறைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் இத்திட்டம் உள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தில் அம்சங்கள் உள்ளன. தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், மேல்சிகிச்சை கவனிப்பு திட்டங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனிதவளம் என அவை உள்ளன.
 • தொற்றும் தன்மையுள்ள மற்றும் தொற்றும் தன்மை அல்லாத நோய்களின் இரட்டை பிரச்சினைகளை சமாளிப்பதுடன், மாவட்ட மற்றும் தாலுகா நிலைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை ஆரோக்கிய திட்டங்களையும் தாண்டிய சுகாதார சேவைகளில் கவனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதாக தேசிய சுகாதாரத் இயக்கம் உள்ளது.
 • தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் கற்ற விஷயங்களை ஒருங்கிணைத்து தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தேசிய சுகாதார இயக்கம் உள்ளது.
 • 2017-18 -ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்திற்கு ரூ.26,690 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் நிதியில் அமல்படுத்தப்படும் திட்டங்களில், பெரியனவற்றில் ஒன்றாக தேசிய சுகாதார இயக்கம் அமைந்துள்ளது.
 • தேசிய சுகாதார இயக்கம் (NHM) தேசிய அளவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் என்ற இரண்டு துறைகளை ஒன்று சேர்த்துள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதி சுகாதார வசதிகளுக்கு புத்துயிரூட்டு வதற்கான, திட்ட செயலாக்கம் மற்றும் சுகாதாரத் துறை ஒதுக்கீடுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத் தக்க ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தியுள்ளது.
 • மாநில அளவுகளிலும் இதேபோன்ற ஒருங்கிணைப்புகள் காணப்பட்டுள்ளன.
 • மாநில நிதித்துறைகளின் வரம்பைக் கடந்து, மாநில சுகாதார சங்கங்களுக்கு மத்திய அரசின் நிதி பரவலாக்கம் கிடைப்பதில் புரட்சிகரமான மாற்றத்தையும் தேசிய சுகாதார இயக்கம் ஏற்படுத்தியுள்ளது.
 • நோய் கட்டுப்பாடு திட்டங்களை தேசிய சுகாதார இயக்கத்தின் வரையறைக்குள் ஒருங்கிணைத்துள்ளது இதன் இரண்டாவது பெரிய மாற்றமாகும்.
 • இந்தியாவில் சுகாதார சேவைத் திட்டங்களை அமல்படுத்துவதில் கணிசமான அளவுக்கு புதுமை களை தேசிய சுகாதார இயக்கம் உருவாக்கியுள்ளது. தேவைக்கேற்ப நிதி ஒதுக்குதல், இந்திய பொது சுகாதார தரங்களின்படி நிறுவனங்கள் செயல்படு வதை மேற்பார்வையிடுதல், மாநிலம், மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து அளவுகளில் திறன் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
 • திட்ட மேலாண்மைப் பிரிவுகளில், மேலாண்மை நிபுணர்களை சேர்த்ததாலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மாநில நிறுவனங்கள் மூலம் உரிய காலத்தில் ஆட்கள் தேர்வு செய்வதற்கு எளிமையான மனிதவள மேம்பாட்டு நடைமுறைகளாலும் இது சாத்தியமாகியுள்ளது.
 • தேசிய சுகாதார முறைமைகள் ஆதாரவள மையம் (NHSRC) உருவாக்கப்பட்டது மற்றொரு குறிப்பிடத்தக்க புதுமை சிந்தனையாகும். பல்வேறு முயற்சிகளை வடிவமைத்து, உருவாக்குவதில் இந்த அமைப்பு உதவுகிறது. சில மாநிலங்களிலும் மாநில முறைமைகள் ஆதாரவள மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
 • மாநில சுகாதார சங்கங்களின் திட்ட செயலாக்கத் திட்டங்களுக்கு வருடாந்திர அடிப்படையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளிக்கிறது. RCH Flexi Pool, NRHM Flexi Pool, தொற்றும் தன்மையுள்ள நோய்களுக்கான Flexi Pool, தொற்றும் தன்மை அல்லாத நோய்களுக் கான எப்ங்ஷ்ண் டர்ர்ப் ஆகிய பெரிய தலைப்புகளின் கீழ் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்படுகிறது. பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப் படுகிறது.
 • பெரிய தலைப்புகளுக்கு உட்பட்டு நிதியை மறு ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு மாநில சுகாதார சங்கங்களுக்கு ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 • மாவட்ட மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நிதி பிரித்து அளிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 • தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னுரிமை கவனம் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை ஆரோக்கிய சேவைகள் திட்டத்தில் உள்ளது. ஜனனி சுரக்ஷா திட்டம் (JSY) மற்றும் சான்றளிக்கப்பட்ட சமூக ஆரோக்கிய செயல் (ASHA) திட்டங்களை வெற்றிகரமாக அமல் செய்வதில், செயல்பாட்டு முறையில் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தி, கர்ப்பிணி களை அதிக அளவில் பொது சுகாதார நிலையங் களுக்கு வர வைத்துள்ளது. பிரசவத்துக்கு அதிக அளவில் வருவதை கையாளும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு தேசிய ஊரக சுகாதார இயக்கம் தேவைக்கேற்ற நிதித் தொகுப்பு ஆதாரவளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 • பிரசவத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண்களை அழைத்து வரவும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கொண்டு வரவும்  ஆம்புலன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவையின் வெற்றிகள், பல மாநிலங்களில் நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
 • தேசிய சுகாதார இயக்கத்தை அமல் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் மாநிலங்களில், மருத்துவ நிலையங்களில் நடைபெறும் பிரசவங் களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் ((MMR) மற்றும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (U5MR) ஆகியவற்றைக் குறைத்துள்ளன. 4 மற்றும் 5-வது மில்லினியம் வளர்ச்சி இலக்குகளில் (MDG-கள்), நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
 • MDG 6-ஐ பொருத்தவரையில், காசநோய், மலேரியா மற்றும் எச்.ஐ.வி. குணமாக்கல் மற்றும் நோய் பாதித்தோர் எண்ணிக்கையை குறைப்பது என்பதில் இலக்கை அடைய முடிந்துள்ளது. முக்கியமான ஆரோக்கிய அடையாளங்கள் மேம்பட்டிருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளவாறு, தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் வாழ்க்கை சுழற்சி அணுகுமுறையை கையாள்வதில் NHM நன்கு செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
 • தேசிய சுகாதார இயக்கத்தின் தொகுப்பில் இரண்டு புதிய திட்டங்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சேர்த்துள்ளது. முதலாவது திட்டமான இந்திரதனுஷ் திட்டம், நோய்த்தடுப்பு மருந்து அளிக்கப்படுவதை ஒரே ஆண்டில் 5% அதிகரித்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
 • காயகல்பம் என்ற இரண்டாவது திட்டம் NHM-ன் கீழ் 2016-இல் தொடங்கப்பட்டது. பொது சுகாதார நிலையங்களில், ஆரோக்கியமான, சுகாதாரமான, உறுதியான கழிவு மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடு ஆகிய நடைமுறைகளை புகுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. காயகல்பம் திட்டத்தின் கீழ் விருதுகளுக்கான போட்டி அறிவிக்கப்பட்டதால், அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கழிவுகள் அகற்றும் தரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
 • தேசிய சுகாதார இயக்கம் திட்டம் சுகாதாரத் துறையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கியுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் ஏஜென்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்தும் சான்றளிக்கப்பட்ட சமூக சுகாதார சேவை (ASHA) பணியாளர்கள் 10 லட்சம் பேரை இந்திய அரசு பணியில் அமர்த்தியுள்ளது. மருத்துவ மையங்களில் பிரசவங்கள் நடைபெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் மற்றும் சிறுவயது குழந்தைகளுக்கான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்யவும், குழந்தை பிறந்த சில நாட்களில் வீடுகளில் எப்படி கவனிப்பது என்று ஆலோசனை வழங்கவும் ஆலோசகர்களாக இந்த ஆஷா திட்ட பணியாளர்கள் செயல்படுவார்கள்.
 • ஊரக சுகாதார திட்டங்களை உருவாக்கவும், ஆஷா திட்டப் பணியாளர்களை மேற்பார்வை செய்யவும் கிராமப்புற சுகாதாரம் மற்றும் கழிவுகள் அகற்றும் கமிட்டிகளுக்கு என்.எச்.எம் அதிகாரம் அளித்துள்ளது. ஆரம்ப சுகாதார மையம் (PHC) மற்றும் சமுதாய சுகாதார மைய (CHC) நிலையில், ரோகி கல்யாண் சமிதிகள் செயல்படுத்தப் படுகின்றன.
 • நோயாளிகளுக்கு உகந்த நிலையங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதை மேற்பார்வை செய்வதற்கான முறைமைகளை இந்த அமைப்பு உருவாக்கும். தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், ஊரக பகுதிகள் தவிர, நகர்ப்புறங்களிலும் தற்போது நல்ல கவனம் கிடைத்துள்ளது.
 • அனைவருக்கும் சுகாதாரம் என்ற லட்சியத்தை நனவாக்கும் வகையிலான தேசிய சுகாதார இயக்கம் இந்தியாவின் சுகாதாரத் துறையில் முன்னோடியான திட்டமாக உள்ளது.  இந்தத் திட்டத்தின் இயல்பான வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்கால சுகாதாரம் அமைந்துள்ளது.