தேசிய மூலதனப் பொருள்கள் கொள்கை

Image result for National Capital Goods Policy

 

  • இந்திய அரசு தேசிய மூலதனப் பொருள்கள் கொள்கை (National Capital Goods Policy-2016)ஒப்புதல் வழங்கி உள்ளது. மூலதனப் பொருள்கள் துறையில், மூலதனப் பொருள்கள் உற்பத்தியை 2014 & 2015-இல் இருந்த ரூ. 2,30,000 கோடியில் இருந்து, 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.7,50,000 கோடியாக உயர்த்தும் தெளிவான இலக்குடன் முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ள கொள்கை இதுவாகும். மேலும், இதன் மூலம் நேரடியாக மற்றும் மறைமுக மாக தற்போதுள்ள4 மில்லிலியன் வேலைவாய்ப்பானது, 30 மில்லிலியன் வேலைவாய்ப்பாக உயரும்.

 

  • இந்த கொள்கையானது, உற்பத்தியில் இப்போதுள்ள 27 சதவீத ஏற்றுமதியை 40 சதவீதத்தை உயர்த்த வழிவகுக்கும். மேலும், நாட்டின் தேவையில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த இது வழிவகுக்கும்.

 

  இதன் மூலம் மூலதனப் பொருள்கள்

 

  • ஏற்றுமதியில் இந்தியா நிகர ஏற்றுமதி நாடாக மாறும். இந்த கொள்கையானது, துணை துறைகளுடன் சிறப்பான தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தவும், திறன் வளர்ப்பு தேவையையும், தரநிர்ணயத்தையும், சிறு, குறு, நடுத்தரதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும்,நம்பிக்கை கட்டுமானத்துக்கும் உதவுவதாக அமையும்.

 

  • மூலதனப் பொருள்களின் உலக தரத்திலான மையம் இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நிஜமாக்க இந்த கொள்கை உதவும்.

 

  • இந்த கொள்கையானது ஒட்டுமொத்த உற்பத்தி துறையில் முக்கிய பங்காற்றி, மேக் இன் இந்தியா தொலைநோக்கை உறுதிப்படுத்தும் தூணாக அமையும்.

 

  • இந்த கொள்கையின் இலக்குகளை குறிப்பிட்ட கால அளவில், ஏற்கனவே அதில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கான உரிய அனுமதியை பெற்று மத்திய கனரக தொழில்கள் துறை நிறைவேற்றும்.

 

    பின்னணி விவரம்:

 

 

  • கடந்த 2014 டிசம்பரில் நடந்த மேக் இன் இந்தியா பணிப்பட்டறையின்போது, மத்திய கனரக தொழில்துறை சார்பில், தேசிய முதலீட்டு கொள்கைக் ஆலோசனை முதல் முறையாக பிரதமரிடம் அளிக்கப்பட்டது.

 

  • இந்த கொள்கையானது, தொழில் துறையில் தொடர்புடையவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறை அமைச்சகங்கள் உள்ளிட்டவற்றுடன் இக்கொள்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

 

  • இக்கொள்கையின் முக்கிய பரிந்துரைகள் மற்றும் விஷயங்கள், மிக சீரிய இத்துறையை ஆதரிக்கும் வகையிலும், அதன் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கொள்கையின் முக்கிய நோக்கம்,மூலதனப் பொருள்கள் துறையில், ஆட்டத்தின் போக்கையே மாற்றும்வகையிலான மாற்றங்களைஉருவாக்குவது தான்.

 

  • நிதி, கச்சாப் பொருள்கள், புதுமை தொழில்நுட்பம், உற்பத்தி, தரம், சுற்றுச்சூழல் சார்ந்த உற்பத்தி நடைமுறைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டில் தேவையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.