“நமாமி கங்கை” திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் மாற்றம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for namami gange

 

  • பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தனியார் பொதுத்துறை கூட்டுறவில், கலப்பு முதலீட்டை அனுமதித்து, நமாமி கங்கை திட்டத்தின் கீழ், கழிவு நீர் துறையை சீர்திருத்த ஒப்புதல் அளித்தது. திறமை, நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டுறவில் கலப்பு முதலீட்டை அனுமதித்ததன் மூலம், இத்திட்டத்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. இத்திட்டத்தின்படி அரசுத் துறை 40 சதவிகித முதலீடு செய்யும். நாளடைவில், 20 ஆண்டு காலம் வரை, கட்டுமானத்தோடு கூடிய இலக்கின் அடிப்படையில் மீதம் உள்ள தொகை வழங்கப்படும்.

 

  • இத்திட்டத்தின் சிறப்பம்சத்தை கணக்கில் கொண்டும், நாளடைவில் இத்திட்டத்தை மேம்படுத்தவும், அரசு ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்கிறது. இந்த ஏற்பாட்டின்படி, திட்டமிடல், சலுகை வழங்குதல், தனியார் பொதுத்துறை திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வை செய்தல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கு சந்தையை தேடுதல், இதற்கென கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றை, கங்கை தூய்மை தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடு, 2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவின் மூலம், இத்திட்டத்தை நிர்வகிக்க வசதியும், நிதி சுயாட்சியும் கிடைக்கும்.

 

  • இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புளோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அந்த ஒப்பந்தங்கள், கழிவு நீரை வெளியிடுபவரிடமிருந்து அதற்கான தொகையை வசூல் செய்தல், நிலத்தடி நீர் பயன்படுத்தலை கட்டுப்படுத்துதல், குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு தடை விதித்தல், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழி செய்யும்.

 

  • இந்த அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்தோடு ஏற்கனவே கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கு சந்தையை தேடவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதே போன்ற ஒப்பந்தங்கள், எரிசக்தி அமைச்சகம், பெட்ரோலிய துறை அமைச்சகம் ஆகியவற்றோடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

  • சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த ஏதுவான சந்தையை உருவாக்க அரசு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கிய திட்டம் இது. நமாமி கங்கை திட்டத்தின் கீழ், தொடக்க காலத்தில் செலவுகளை குறைத்தது போல, இத்திட்டத்தின் மூலம், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அதே ஒதுக்கீட்டில் செயல்படுத்த முடியும். இத்திட்டத்தில் பங்கெடுக்கும் தனியார் நிறுவனங்களை மொத்த திட்ட காலத்துக்கும் நீடிக்கும்படி அவர்களின் பங்கை அதிகரிக்க வேண்டும். இத்திட்டத்துக்கான தரத்தை அரசு செய்யும் முதலீட்டோடு இணைப்பதன் மூலம், திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்படி செய்ய முடியும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவு நீரை வெளியிடுபவரிடமிருந்து அதற்கான தொகையை வசூல் செய்ய படிப்படியாக வகை செய்யப்படும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கான சந்தையை அதிகரித்தால், சுத்தமான நதி நீரை பயன்படுத்துவது குறைந்து, கங்கை நதியில் நீர் வரத்தும் அதிகமாகும். நீண்ட கால அடிப்படையில் இத்திட்டம் தண்ணீரை பொறுப்போடு பயன்படுத்த ஊக்குவித்து, எதிர்காலத்தில் வரும் என்று கருதப்படும் நீர் பற்றாக்குறையை குறைக்க உதவும்.

 

பின்னணி :

 

  • இது வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களான, கங்கை செயல்திட்டம் 1 மற்றும் 2, NGRBA, யமுனா செயல்திட்டம் போன்றவை குறைந்த பலன்களையே அளித்திருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, உத்தராகண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 30 சதவிகித நிலையங்கள் செயல்படவில்லை என்றும், 94 சதவிகித நிலையங்கள், உரிய தரத்தின்படி இல்லை எனறும் தெரிய வந்துள்ளது.

 

  • கங்கையை சுத்தப்படுத்தத் தடையாக இருந்த மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும், அமைச்சரவையின் முடிவால் தீர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த ஒப்புதல் மூலமாக “நமாமி கங்கை” திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை 100 சதவிகிதம் முழுமையாக பயன்படுத்த முடியும். மேலும், கழிவு நீர் துறையை முழுமையாக சீர்திருத்தி, அனைத்து திட்டங்களையும் விரைவுபடுத்தவும் இந்த ஒப்புதல் உதவும்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]