Nalan Kathaikal | TNPSC | TET Study Materials | நளன் கதை
Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

diamond_2807463f

  • முன்னைய இதிகாச புராணங்களில் காணப்பட்ட கிளைக்கதைகள் பல பிற்காலத்தில் தனிக் காப்பியங்களாயின.
  • அவ்வகையில் பாரதத்தில் இருந்த கிளைக்கதையான நளன் சரிதம் பிற்காலத்தில் தனி நுாலாயிற்று. சிலப்பதிகாரத்தில் நளன்சரிதம் பற்றிய குறிப்பு ஊர்காண்காதையில் இடம் பெறுகிறது.
  • கி.பி. 13 ஆம் நுாற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவராகிய புகழேந்திப் புலவர் வெண்பா யாப்பினால் நளன் சரிதையைப் பாடினார்.
  • தொண்டை நாட்டில் பொன் விளைந்த களத்துாரில் பிறந்த இப்பெரும் புலவர் மள்ளுவ நாட்டுச் சந்திரன் சுவர்க்கி என்ற மன்னனால் ஆதரிக்கப்பட்டவர்.
  • இவர் இலங்கைக்குப் பயணம் செய்து, அங்கிருந்த பாண்டியர் படைத்தளபதி ஆரிய சேகரனிடம் பரிசு பெற்று வந்தார் என்பர்.
  • அவன் முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தவன். அம்மன்னவன் காலம் கி.பி 1266 – 1311 என்பர்.
  • இந்நுால் வெண்பா யாப்பினைக் கற்பனை வளத்துடன் பயன்படுத்தி, அதற்கொரு தனிச் சிறப்பை நல்கியது.
  • அதனால் வெண்பாவிற் புகழேந்தி என்றும் இவர் பாராட்டப் பெற்றவர். இது பற்றிய ஒரு தனிப்பாடல் உண்டு:

 

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர்

              செயங்கொண்டான்; விருத்தம் என்னும்

       ஒண்பாவிற்கு உயர்கம்பன் கோவைஉலா

              அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;

       கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;

              வசைபாடக் காள மேகம்;

       பண்பாயஉயர் சந்தம் படிக்காச

              லாதொருவர் பகரொணாதே!

 

  • ஒவ்வொரு புலவரின் தனித்திறனையும் மதிப்பீடு செய்யும் இது போன்ற பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் நினைவுகூரற்பாலன.
  • நளவெண்பா மூன்று காண்டங்களையும் 424 வெண்பாக்களையும் கொண்டதாகும்.

 

Click Here To Get More Details