Nadum Nagaramum | TNPSC | TET Study Materials | நாடும் நகரமும்
Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

நாடு: 

  • நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
  • மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
  • நாளடைவில் நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன.
  • கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
  • முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று.
  • இப்பொழுது அப்பெயர் பொருணை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது.
  • அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
  • சோழநாட்டில் மாயவரத்திற்கு அடுத்துள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கப்படுகிறது.
  • கூர்ரைநாடு என்பது கொரநாடு என்று மருவிற்று.
  • பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.

நகரம்: 

  • சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பலம்பெரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
  • பாண்டியநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராகா விளங்குகிறது.
  • இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

சென்னை: 

  • திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும்.
  • அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம்.
  • அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.

 

 

Click Here To Get More Details