Nadagam | TNPSC | TET Study Materials | நாடகம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

06mar_TH_Music-_07_2333854f

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

  • கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.
  • தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும்.
  • இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக் காட்டப்படுவது நாடகமாகும்.
  • எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.
  • தெருக்கூத்துகளாக இருந்து, மேடை நாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

 

தமிழ்நாடகத்தின் தொன்மை:

  • தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
  • சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
  • அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.

சங்ககாலகூத்துகள் 

  • குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்

  • வேத்தியல், பொதுவியல்என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம்.
  • வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும்,
  • பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக் காட்டப்படுவதாகும்.

 

Click Here To Get More Details