Modules | TNPSC | TET Study Materials | தொகுதிகள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தொகுதிகள்:

  • நவீன தனிம அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன.
  • இதில் காணப்படும் செங்குத்து பத்திகள் தொகுதிகள் எனப்படும்.
  • ஒரே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஓர் குடும்பத் தனிமங்களாக உள்ளன.
  • IA முதல் VIIA வரையில் உள்ள தனிமங்கள் பிரதிநித்துவத் தனிமங்கள்.
  • IA தொகுதித் தனிமங்கள் கார உலோகங்கள் ஆகும்.
  • IIA தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் ஆகும்.
  • VIIA தொகுதித் தனிமங்கள் (17) ஹாலஜன் அல்லது உப்பீனிக் குடும்பத் தனிமங்களாகும்.
  • IB யிலிருந்து VIIB மற்றும் VIII வது தொகுதித் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்.
  • பூஜ்யத் தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் எனப்படும்.
  • லாந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் ஒரே தொகுதியில் இருந்தாலும் அவைகள் அட்டவணைக்குக் கீழே தனி அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

தொகுதி I

  • தொகுதி I-ல் உள்ள உலோகங்கள் (Li, Na, K, Rb, Cs, Fr) கார உலோகங்கள் ஆகும். இவை மென்மையான திண்மங்கள் ஆகும்.
  • குறைந்த உருகுநிலையும், குறைந்த அடர்த்தியையும் பெற்றுள்ளன. அதிக வினைத்திறன் உடையவை. எனவே, எண்ணெயில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் காற்றில் உள்ள ஆக்சிஜனுடனும், நீருடனும் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
  • இவ் உலோகங்கள் வெட்டப்படுங்கால் வெள்ளி நிறப்பரப்பு உண்டாகி விரைவாக மங்குகிறது.
  • தொகுதியில் கீழ்நோக்கி வந்தால் இத்தனிமங்களின் வினை திறன்கள் அதிகரிக்கின்றன. இதில் அதிக வினைதிறன் கொண்ட தனிமம் Fr ஆகும். எனினும், இது கதிரியக்கத் தன்மையுடையது. அரிதாகக் காணப்படுவது, இதன் அரைவாழ் காலம் 5 நிமிடங்கள், புவியின் மீது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 17 அணுக்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
Click Here To Get More Details