நவீன ஆவர்த்தன விதி

Deal Score0

நவீன ஆவர்த்தன விதி:

  • தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள் அத்தனிமங்களின் அணு எண்களுக்கு ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.
  • நீள்வரிசை அட்டவணை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணையாகும்.
  • 1912-ல் மோஸ்லே என்ற அறிவியலறிஞர் தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அணு எண்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று அறிந்தார்.
  • இதன் அடிப்படையில் நவீன ஆவர்த்தன விதி உருவானது.
  • தனிமங்களை அவற்றின் அணு எண்களின் ஏறுவரிசையி்ல் அமைத்தால் ஒத்த பண்புகளையுடைய தனிமங்கள் சீரான இடைவெளிக்குப் பின் அமைகின்றன.
  • இதுவே ஆவர்த்தனத் தன்மை எனப்படுகிறது.
  • அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிம வரிசை அட்டவணை நீள் வரிசை அட்டவணை ஆகும்.
  • தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில்
  1. மந்தவாயு தனிமங்கள்
  2. பிரதிநிதித்துவ தனிமங்கள்
  3. இடைநிலைத் தனிமங்கள்
  4. உள் இடைநிலைத் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்பு அம்சங்கள்:

  • தனிம வரிசை அட்டவணையிலுள்ள கிடைமட்ட வரிசைகள் தொடர்கள் எனப்படும்.
  • ஒரு தொடரில் ஒரே வரிசையாக அமைந்த தனிமங்கள் ஒரே இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கும். மொத்தம் ஏழு தொடர்கள் உள்ளன.
Click Here To Get More Details