இந்திய தேசிய காங்கிரஸ்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய தேசிய காங்கிரஸ்

Indian National Congress

இந்திய தேசிய காங்கிரஸ்

  • நில உரிமையாளர்கள் சங்கம் (1837)
  • வங்காள பிரிட்டிஷ் இந்தியா சொசைட்டி (1843).  1851 – ல் இந்த இரண்டு சங்கங்களும் இணைந்து பிரிட்டிஷ் இந்தியச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கின.
  • பம்பாய் அசோசியேஷன் மற்றும் சென்னை மாநிலச் சங்கம் 1852 – ல் உருவானது.  இவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரப் பத்திரத்தில், உப்பு மற்றும் இண்டிகோ விற்பனையின் ஏகபோக உரிமையில் மாற்றங்கள் வேண்டி மனுக்கள் கொடுத்தனர்.
  • பூனா சார்வஜனிக்சபா சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படப் பாடுபட்டது.
  • 1876 – ல் இந்தியன் அசோசியேஷன் கல்கத்தாவில் சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆனந்த்மோகன்போஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
  • சென்னை மகாஜனசபை மற்றும் பம்பாய் பிரசிடென்சி அசோசியேஷன் ஆகியவை 1884 – ல் நிறுவப்பட்டது.  டிசம்பர் 1883 – ல் இந்தியன் அசோசியேஷன் பொது மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரபலமானவர்களை அழைத்தது.  இதற்கு தேசிய மாநாடு (1883) என்று பெயரிட்டது.  இது இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றுவதற்கு ஒத்திகையாக அமைந்தது.
  • தேசிய மாநாடு மற்றும் இந்தியன் நேஷனல் யூனியன் (1884 ல் A.O. ஹ்யூம்) இரண்டும் இணைந்து இந்திய தேசியக் காங்கிரசாக 1885 – ல் உருவானது.

 

Click Here to Download