ஆரிய சமாஜ்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆரிய சமாஜ்

Arya Samaj

ஆரிய சமாஜ்

 • ஸ்வாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் 1875 – ஆம் ஆண்டு முதல் ஆரியசமாஜ சங்கம் பம்பாயில் தொடங்கப்பட்டது.
 • நான்கு வர்ணங்களும் தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.  பிறப்பின் அடிப்படையில் அல்ல என்ற கொள்கையினைக் கொண்டது ஆரிய சமாஜ்.
 • தீண்டாமை ஒழிப்பு, ஜாதி வேறுபாடு ஒழிப்பு, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தல், விதவை மறுமணம், கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆரிய சமாஜ் தனது நோக்கமாகக் கொண்டது.
 • ஆரிய சமாஜின் தலைமையகம் பிறகு லாகூருக்கு மாற்றப்பட்டது.
 • வேதத்தின் முதன்மையை ஆரிய சமாஜ் ஒப்புக் கொண்டது. ஆனால் அது பகுத்தறிவோடும், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்று நம்பியது.
 • கடவுளைத் தந்தையாகவும், சக மனிதர்களைச் சகோதரர்களாகவும் எண்ணும்படி அறிவுறுத்தியது.
 • ஆண், பெண் சமத்துவம், எல்லோரிடமும் அன்பு மற்றும் தருமம் செய்தல் ஆகியவற்றை ஆதரித்தது.
 • 1886 – ல் லாலா ஹசன்ஸ்ராஜ் என்பவர் D.AV. பள்ளியைத் தொடங்கினார்.
 • ஹரித்வாரில் குருகுல பாடசாலை 1902 – ல் தொடங்கப்பட்டது.  தயானந்தர் 1883 – ல் இறந்த பிறகு, குருகுலப் பிரிவில் வேற்றுமைகள் எழுந்தன.
 • அதனால் சுவாமி சாரதானந்தர் தலைமையில் பழைய குருகுலக் கல்வியை ஆதரிப்பவர்கள் ஒரு புறமும், ஆங்கிலோ வேதப்பள்ளிகள் மூலம் ஆங்கிலக் கல்வியை வளர்ப்பதை இன்னொரு பிரிவினரும் (DAV பிரிவு – லாலா லஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ்) இரண்டு பிரிவுகளாக ஆரிய சமாஜ் பிளவுபட்டது. (1892)
 • ஆங்கில வேதப்பள்ளி லாகூரில் 1886 ல் தொடங்கப்பட்டது.  அதுவே ஆரிய சமாஜின் மையப்பகுதியாக விளங்கியது. 

 

Click Here to Download