பள்ளித் தோட்டத் திட்டம் பிராதான் மந்திரித் திட்டம்

Deal Score+7

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Related image

பள்ளித் தோட்டத் திட்டம் பிராதான் மந்திரித் திட்டம்

 

 • உலகில் தானியங்கி வாகனங்கள் மற்றும் பெட்ரோலால் இயங்கும் எந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருவதை கருத்தில்கொண்டு நாம் அதிகளவிலான மரங்களை வளர்க்காவிட்டால், நம் கண்ணெதிரிலேயே இந்த உலகம் அழிந்துபோவது உறுதி. இதனை நாமோ எந்த ஒரு அரசாங்கமோ விரும்பப்போவதில்லை.
 • இன்று இந்த உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை தீவிரவாதமோ, பணவீக்கமோ அல்ல… மாறாக உலகின் மாசுபடும்விகிதம் அதிகரித்துவருவது தான். அதனை உடனடியாகத் தடுப்பதற்கான முதன்மையான வழி காடுவளர்ப்பதுதான்.
 • எந்த ஒரு விஷயத்திலும் அரசாங்கம் முன்னுதாரணமாகத் திகழவேண்டுமென்ற நோக்கில், மோடி அரசு பள்ளித் தோட்ட திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 • மாணவர்களை இயற்கைக்கு நெருக்க மானவர்களாக உணரச்செய்வது முக்கியமென உணர்ந்து மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், பள்ளியானது தனது வளாகத்துக்குள் தோட்டத்தை ஏற்படுத்தும். அத்தோட்டத்தில் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்க்கவேண்டும்.
 • சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமை யாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் நாட்டை வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்க மாகும். மாணவர்கள் விதைகளை விதைத்து, கன்றாக்கிப் பராமரித்து செடிகளாக மாற்றவேண்டும். இவை அனைத்தும் அந்தப் பள்ளியிலுள்ள தேர்வுசெய்யப்பட்ட பயிர்வளர்ப்பில் பயிற்சியுடைய ஆசிரியரின் கண்காணிப்பில் நிகழும். உயிரியல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது பாடமாகவும் திகழும்.
 • இந்தக் கன்றுகள் வளர்ந்ததும், அதே மாணவர்கள் பள்ளியிலும் பள்ளியைச் சுற்றியிலுள்ள பகுதிகளிலும் அந்தக் கன்றுகளைக் கொண்டுசென்று வளர்ப்பார்கள். இப்படியாக பள்ளி மாணவர்களை மரம் வளர்ப்பில் ஈடுபடுத்துவதன் வழி தேவைக்கும் அதிகமான மரங்கள் வளர்க்கப் படுவதுடன், சுற்றுச்சூழல் பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது.
 • முதல் வருடம் இத்திட்டம் 1,000 பள்ளிகளில் தொடங்கப்படுமெனவும், மூன்று வருடங்களில் நாடெங்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுமெனவும் கூறப்பட்டுள்ளது.
 • தங்கள் பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தை சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாக மாற்றும் இத்திட்டத்தில் பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களும் ஊக்கத்துடன் பங்கேற்கவேண்டுமென தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
 • இத்திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு பள்ளியும் தங்களது வளாகத்தில் தோட்டத்துக்கென ஒரு சிறு பகுதியை ஒதுக்கும்படி வழிகாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகத்திலிலிருந்து மட்டும் கற்காமல், செயல்மூலம் கற்கவும் தங்களது சுற்றுப் புறங்களின் மீதான பொறுப்புணர்வு அதிகரிக்கவும் இடமுண்டமாகும்.
 • மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு கன்றையாவது வீட்டுக்கு எடுத்துச்சென்று வீட்டிலோ சுற்றுப்புறத்திலோ வளர்த்து, தங்களது ஆண்டறிக்கைத் தேர்வு அட்டையோடு, தாங்கள் வளர்த்த மரத்தையும் பெற்றோரிடம் காட்டி மகிழவேண்டும்
 • நெல்லி, வேம்பு, ஏலக்காய், மா உள்ளிட்ட மரங்களை வளர்க்க இத்திட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது.