பொது மக்கள் மனதில் காவல் துறையைப் பற்றி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பொது மக்கள் மனதில் காவல் துறையைப் பற்றி

Minds of the public about the police

பொது மக்கள் மனதில் காவல் துறையைப் பற்றி

 • காவலர்களாகிய நீங்கள் பொது மக்கள் மனதில் காவல் துறையைப் பற்றி எந்த எண்ணங்களை முக்கியமாக பதிய வைக்க வேண்டும்?
  • பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியவர்கள் என்று கருத வேண்டும்
 • காவல் துறையில் நீங்கள் பணியாற்ற விரும்பக் காரணம் என்ன?
  • மனதுக்குப் பிடித்தமான பணி என்பதால்
 • காவல் துறையின் முக்கியமான பொறுப்பு என்ன?
  • சமூகத்தின் அமைதியான வாழ்க்கை
 • காவல் நிலைய அலுவலர்களால் சட்ட விதிகள் மீறப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • உயர் அதிகாரியிடம் தெரிவிப்பேன்
 • குற்றவாளிகளை ஒழிக்கச் செய்ய வேண்டிய செயல் என்ன?
  • அக்குற்றங்களுக்கான காரணங்களை அறிந்து அவற்றைக் களைதல்
 • கையூட்டுப் பெறும் மற்ற காவலர்களின் கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • சரியான நடவடிக்கையே
 • காவல் துறையில் புதிதாக பணியில் சேரும் உங்களது முக்கிய நோக்கமாக கருதுவது எது?
  • கொடுக்கப்பட்ட பணியைத் திறமையாக நேர்மையாகச் செய்வது
 • காவல் துறை எதனை மதித்து நடக்க வேண்டும்?
  • இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்து
 • தீவிபத்து ஏற்படும் பொழுது காவல் துறையினராகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • தீயணைக்கும் படையுடன் சேர்ந்து உதவிசெய்வேன்
 • குற்றவாளி உங்கள் வீட்டில் உள்ள ஒருவர் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்
 • காவலராகிய உங்கள் கடமை என்ன?
  • மக்களின் உடமைக்குப் பாதுகாப்பு அளிப்பது மக்களின் உயிர்க்கு பாதுகாப்பு தலைவர்களின் உயிர்க்கு பாதுகாப்பு கொடுப்பது
 • காவல் துறையினர் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்ன?
  • பொது மக்களின் நானும் ஒருவன் என்று கருத வேண்டும்
 • காவல் துறையின் தலையாய கடமை எனக் கருதப்படுவது எது?
  • சட்டம் ஒழுங்கைக் காப்பது
 • காவல் துறையினர் பொது மக்களிடம் எவ்வாறு பழக வேண்டும்?
  • கண்ணியமாகவும், நேர்மையாகவும், பழக வேண்டும்
 • உள்துறை என்பது ————– யை நிர்வாகிக்கும் துறை ஆகும்
  • காவல் துறை
 • குற்றவாளிகள் நாட்டில் பெருகக் காரணம் என்ன?
  • சமூக ஏற்றத்தாழ்வுகள்
 • காவல் துறையினருக்கு ஊதியம் யாரிடமிருந்து கொடுக்கப்படுகிறது?
  • பொது மக்களின் வரிப் பணத்திலிருந்து
 • உங்கள் தந்தை குற்றவாளி என்று தெரிந்தால் உங்களது நடவடிக்கை எப்படி இருக்கும்?
  • நடவடிக்கையின் தன்மையில் மாற்றம் இருக்காது
 • இரவு நேரங்களில் பெண் கைதிகளை காவல் நிலையங்களில் வைத்திருப்பது சரிதானா?
  • சட்டப்படிதவறு
 • காவல் துறையினருக்கு எந்தவிதமான சர்ச்சைகளில் தலையிட அதிகாரம் கிடையாது?
  • வாய்க்கால், வரப்பு நிலம் கட்டிடம்
 • காவலர் பணியிலிருக்கிற நீங்கள் உயர்பதவி கிடைக்க என்ன செய்வீர்கள்?
  • கடுமையாக உழைப்பேன்
 • உண்மைகளை அறிந்து கொள்ள குற்றவாளிகளை எவ்வாறு நடத்த வேண்டும்?
  • மிகக் குறைந்த தண்டனை முறைகளைப் பயன்படுத்தலாம்
 • காவல் துறையினர் தவறு செய்பவர்களின் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்?
  • உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
 • எவ்வகையான தொடர்பு காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்க வேண்டும்?
  • சுமுகமாகவும், நட்புடனும், உதவிபுரியும் வகையில் இருக்க வேண்டும்
 • கலவரங்கள் ஏற்படும் போது உங்கள் செயல் எதுவாக இருக்கும்?
  • என்னுடைய பணியை உடனடியாகச் செய்யத் தொடங்குவேன்
 • காவல் துறையினர் சாட்சியை எவ்வாறு நடத்த வேண்டும்?
  • மரியாதையாக நடத்த வேண்டும்
 • பெண் கைதிகளை விசாரணை செய்யலாமா?
  • சட்டப்படி பெண் காவலர் மூலம் விசாரணை செய்ய வேண்டும்
 • மதுவிலக்கு நாட்டில் முழுமையாக அமல்படுத்தவது என்பது?
  • முடியக் கூடிய செயல்தான்
 • காவல் துறையினர் எல்லாரிடமும் எப்படி நடந்துகொள்ளுதல் வேண்டும்?
  • அனைவருக்கும் சமமாக
 • காவலராகப் பணியாற்றுபவருக்கு தினமும் உடற்பயிற்சி என்பது
  • தினந்தோறும் அவசியமானது
 • தவறு செய்தவர் உங்கள் நண்பராக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பேன்
More Materials