நுண்ணுயிரியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நுண்ணுயிரியல் (Micro biology):

 • நுண்ணுயிரினங்கள் (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, மற்றும் புரோட்டோசோமா) பற்றி அறிய உதவும் அறிவியல் நுண்ணுயிரியல் (Micro biology) என்று பெயர்.

வைரஸ்கள் (Virus) :

 • வைரஸ்களை பற்றி அறிய உதவும் ஓர் அறிவியல் பிரிவு வைராலஜி (Virology) என்று பெயர்
 • வைரஸ்களில் RNA மற்றும் புரதங்கள் மட்டும் உள்ளன.
 • வைரஸ்கள் மிக நுண்ணியவைகள் ஆதலால் இவற்றை நாம் எலக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே காண இயலும்
 • சில வைரஸ்கள் தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும் நோயினை உண்டாக்குகின்றனர்
 • தாவரங்களில் காணப்படும் வைரஸ் நோய்களாவன புகையிலை, ஆப்பிள், கரும்பு, மொசைக் வைரஸ் மற்றும் வாழை உச்சிக் கொத்து நோய், ஒரைசாவில் துங்கு ரோவ் நோய் போன்றவைகள்
 • மனிதர்களில் காணப்படும் வைரஸ் நோய்களான சாதாரண சளி, தட்டம்மை (ருபியோலா) இன்ஃப்ளுயன்சா, சின்னம்மை (Chicken pox), புட்டாளம்மை (Mumps).
 • எய்ட்ஸ் வைரஸ் மனிதர்களில் உயிர் உள்ள இரத்த வெள்ளையணுக்களை தாக்கி உயிரை பறிக்கும் அளவு நச்சுத்தன்மை வாய்ந்தது.
 • எலிசா மற்றும் வெஸ்டர்ன் பிளாட் பரிசோதனை முலம் எய்ட்ஸ் வைரஸ்களை கண்டறியலாம்.
 • I.V வைரஸ் (ரிட்ரோ வைரஸ்) இதை முதன்முதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லுக் மான்டக்னர் என்ற பேராசிரியர் 1983 ல் கண்டறிந்தார்.
 • AIDS என்பதன் விரிவாக்கம் Acquired Immuno Deficiency Syndrome பெறப்பட்ட நோய்க்கு எதிர்ப்புக் குறை நோய் என்பதாகும்.
 • HIV வைரஸ் கண்டுபிடித்தவர் ராபர்ட் கேவோ மற்றும் அவரது குழுவினர்.
 • தாவர வைரஸ்ஸை (TMV) W.M. ஸ்டான்லி என்பவர் கண்டறிந்தார்.
 • வைரஸ்கள் சாதாரண செல் அமைப்பை கொண்டிருப்பது அல்ல.
 • வைரஸ்கள் திடீர் மாற்றம் அடையும் திறன் உள்ளவை.
 • வைரஸ்களின் அளவு 20 நேனோமீட்டரிலிருந்து 300 நேனோமீட்டர் வரை உள்ளன.
 • பாக்டீரியோஃபேஜின் அளவு 10-100 நேனோமீட்டர்.
 • கன சதுரம் (அ) கோள வடிவ வைரஸ் (எ.கா) அடினோ வைரஸ்கள், எச்.ஐ.வி
 • சுருள் வடிவ வைரஸ் (எ.கா) இன்ஃபுளுயன்சா வைரஸ்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]