உலோகங்கள், அலோகங்கள் ஒப்பீடு

உலோகங்கள், அலோகங்கள் ஒப்பீடு

 

வ. எண். உலோகங்கள்   அலோகங்கள்
1. அறை வெப்பநிலையில் பாதரசம் தவிர திண்ம நிலையில் உள்ளன.  (பாதரசம் ஒரு திரவம்) புரோமின் தவிர திண்மம் அல்லது வாயுக்கள் நிலையில் உள்ளன.  (புரோமின் தவிர)
2. இவை கடினமானது. வளையக்கூடியது.  எனவே, இதைத் தகடுகளாக நீட்ட முடியாது. இவை தகடாக்கத்தக்கதல்ல.  உடையும் இயல்பு உடையது.
3. இவை பளபளப்பு தன்மை உடையது.  மேற்பரப்பில் அரிமானம் அடையக் கூடியது. பளபளப்பு தன்மை அற்றது.  (அயோடின், கிராபைட், வைரம் தவிர)
4. மோதும் போது ஒர விதமான ஒலியை எழுப்பும் தன்மையுடையது. இவை ஒலி எழுப்பாது.
5. வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தக்கூடியது.  (பிஸ்மத் தவிர). இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது.
6. இது கம்பியாக நீட்டப்படும் தன்மையுள்ளது.  (தங்கம், மற்றும் வெள்ளி சிறந்த கம்பியாக   நீட்டப்படும் உலோகம்). கம்பிகளாக நீட்ட முடியாது. (கார்பன் இழை தவிர).
7. கடினமானது.  (சோடியம், பொட்டாசியம் தவிர)  அதிக மீளும் தன்மை உடையன. மென்மையானது (வைரம் மிகவும் கடினமானது).
8. உலோகங்கள் அதிக அடர்த்தி உடையன. குறைந்த அடர்த்தியுடையன.
9. உருகுநிலை, கொதிநிலை அதிகம்.  (சோடியம், பொட்டாசியம் தவிர). உருகுநிலை, கொதிநிலை குறைவு.
10. உலோகங்கள் நேர்மின் தன்மை உடையது. (எலக்ட்ரானை எளிதில் தரும்). அலோகங்கள் எதிர்மின் தன்மை உடையது. (எலக்ட்ரானை எளிதில் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையது).
11. உலோகங்கள் ஒரு சிறந்த ஒடுக்கும் காரணிகள்.
12. புறவேற்றுமை வடிவங்களை உடையவை அல்ல. புறவேற்றுமை வடிவங்களை உடையவை (கந்தகம், பாஸ்பரஸ்).
13. மின்னாற்பகுக்கும்போது எதிர்மின்வாயை அடைகின்றன. மின்னாற்பகுக்கும்போது நேர்மின்வாயை அடைகின்றன.
14. உலோகங்கள் தங்களுக்குள் கூடிச் சேர்மங்களை உண்டாக்குவதில்லை.

 

Click Here To Get More Details

No Comments

Sorry, the comment form is closed at this time.